மலேசிய போக்குவரத்து அமைச்சு (மலாய்: Kementerian Pengangkutan Malaysia; ஆங்கிலம்: Ministry of Transport Malaysia) என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் (Federal Government Administration Complex) உள்ளது. இந்த அமைச்சின் அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக்; பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன்.[3]
பொறுப்பு துறைகள்
சாலை போக்குவரத்து (Road Transport)
தொடருந்து போக்குவரத்து (Rail Transport)
சிவில் வானூர்தி போக்குவரத்து (Civil Aviation )
கடல்சார் (Marine)
சாலை பாதுகாப்பு (Road Safety)
துறைமுக ஆணையம் (Port Authority)
தொடருந்து சொத்துக்கள் (Railway Assets)
கடல்சார் (Maritime)
வானூர்தி விபத்து விசாரணை (Air Accident Investigation)
இருப்பியக்கம் (Logistics)
கடல்சார் பாதுகாப்பு (Maritime Safety)
கப்பல் போக்குவரத்து (Shipping)
வானூர்தி நிலையங்கள் (Airports)
வானூர்தி நிறுவனங்கள் (Airlines)
அமைப்பு
போக்குவரத்து துறை அமைச்சர்
அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
வானூர்தி விபத்து விசாரணைப் பணியகம் (Air Accident Investigation Bureau)
துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
சட்டப் பிரிவு (Legal Division)
நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு (Strategic Planning and International Division)
கடல்சார் பிரிவு (Maritime Division)
வானூர்திப் பிரிவு (Aviation Division)
தளவாட மற்றும் தரைவழி போக்குவரத்து பிரிவுLogistic and Land Transport Division)
துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு (Administration and Finance Division)
அபிவிருத்தி பிரிவு (Development Division)
கணக்கு பிரிவு (Account Division)
தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள், நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.