மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Kerajaan Tempatan (KPKT); ஆங்கிலம்: Ministry of Local Government Development) (MOHA) என்பது மலேசிய மக்களின் நகர்ப்புற நல்வாழ்வு, மலேசிய மக்களின் வீட்டுவசதிகள், நாடளாவிய நிலையில் உள்ள உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.
நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being); வீட்டுவசதி (Housing); உள்ளூர் அரசாங்கம் (Local Government); தீயணைப்பு மீட்பு (Fire and Rescue) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.
பொறுப்பு துறைகள்
நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being)
வீட்டுவசதி (Housing)
உள்ளூர் அரசாங்கம் (Local Government)
தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் (Fire and Rescue Authority)
நகர திட்டமிடல் (Town Planning)
கிராமப்புற திட்டமிடல் (Country Planning)
நில அமைப்பு (Landscape)
திடக்கழிவு மேலாண்மை (Solid Waste Management)
கட்டட அடுக்கு மேலாண்மை (Strata Management)
லேவாதேவி தொழில் (Moneylenders)
அடைமான வட்டிக்கடைகள் (Pawnbrokers)
அமைப்பு
உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்
உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
சட்டப் பிரிவு (Legal Advisor Office)
நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் மேம்பாடு)
திட்ட மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் பிரிவு (Project Development and Implementation Division)
கொள்கை மற்றும் ஆய்வாளர் பிரிவு (Policy and Inspectorate Division)
கொள்கை மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு (Policy and International Relations Division)
துணைப் பொதுச் செயலாளர் (நகர்ப்புற நல்வாழ்வு) (Urban Wellbeing)
நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு (Urban Wellbeing Division)
நகரமயமாக்கல் சேவை பிரிவு (Urbanization Service Division)
பணம் கொடுப்பவர்கள் மற்றும் அடகு வைப்பவர்கள் பிரிவு (Moneylenders and Pawnbrokers Division)
துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) (Management)
நிதி மற்றும் கொள்முதல் பிரிவு (Finance and Procurement Division)
தகவல் தொழில்நுட்ப பிரிவு (Information Technology Division)
மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
நகரம் - நகராட்சி - (மலாய்: Majlis Perbandaran; ஆங்கிலம்: Municipal Council); எ.கா. காஜாங் நகராட்சி)
கிராமப்புறம் - மாவட்ட ஊராட்சி - (மலாய்: Majlis Daerah; ஆங்கிலம்: District Council); எ.கா. உலு சிலாங்கூர் ஊராட்சி)
சிறப்பு உள்ளாட்சி - நகராண்மைக் கழகம் - மேம்பாட்டுக் கழகம் - (மலாய்: Pihak Berkuasa Tempatan; ஆங்கிலம்: Corporation; Development Board; Development Authority); எ.கா. புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம்)
உள்ளூராட்சிகள்
தற்போது மலேசியாவில் மொத்தம் 155 உள்ளூராட்சிகள் உள்ளன. அவற்றின் பிரிவுகள்:
1973-ஆம் ஆண்டில் மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதற்கு முன்னர் மலேசிய உள்ளாட்சி மன்றங்களில், 6 வகையான உள்ளாட்சிகள் இருந்தன. உள்ளாட்சிப் பதவிகளும் உள்ளாட்சிகளுக்குப் பெயர் வைப்பதிலும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு இருந்தன.
அப்போது மலேசியாவில் இருந்த உள்ளாட்சி மன்றங்களின் எண்ணிக்கை 418. அவை கீழ்க்கண்ட பெயர்களில் செயல்பட்டன:
மாநகராட்சி: (மலாய்: Dewan Bandaraya; ஆங்கிலம்: City Hall or City Council);
நகராட்சி: (மலாய்: Majlis Bandaran; ஆங்கிலம்: Municipal Council);
நகராண்மைக் கழகம்: (மலாய்: Majlis Bandaran / Jemaah Bandaran; ஆங்கிலம்: Town Council);
நகர வாரியம்: (மலாய்: Lembaga Bandaran; ஆங்கிலம்: Town Board);
கிராமப்புற மாவட்ட மன்றம்: (மலாய்: Majlis Daerah Kerajaan Tempatan; ஆங்கிலம்: Rural District Council);
உள்ளூராட்சி: (மலாய்: Majlis Tempatan; ஆங்கிலம்: Local Council)
உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் கூட்டரசு துறைகள்
வீட்டுவசதி மற்றும் அடுக்கு மேலாண்மைக்கான தீர்ப்பாயம்
(Tribunal for Housing and Strata Management)
(Tribunal Perumahan Dan Pengurusan Strata) (TPPS)
நகர்ப்புற நல்வாழ்வு, வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசு பயிற்சி நிறுவனம்
(Urban Wellbeing, Housing and Local Government Training Institute)