மலேசிய கல்வி அமைச்சர்
மலேசிய கல்வி அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Education Malaysia; மலாய்: Menteri Pendidikan Malaysia) என்பவர் மலேசிய கல்வி அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர்கள் இருவர் உதவியாக உள்ளனர். மலேசிய கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார். வரலாற்று அடிப்படையில், மலேசிய கல்வி அமைச்சர் பதவி என்பது எதிர்கால மலேசியப் பிரதமர் பதவிக்கு ஒரு படிக்கல் என்று அறியப்படுகிறது. மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரகுமான்; மற்றும் ஒன்பதாவது பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து மலேசியப் பிரதமர்களும் இந்தப் பதவியை வகித்துள்ளனர். பொதுமலேசிய கல்வி அமைச்சரின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது. மலேசியாவின் கல்வித் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும்; செயல் பாடுகளுக்கும் பொறுப்பு வகிக்கும் முதன்மை அரசாங்க அமைச்சராகச் செயல் படுகின்றார். அத்துடன் கல்வி சார்ந்த அனைத்துக் கொள்கைகளை நிர்வகித்துப் பராமரிக்கும் பொறுப்புகளும் இவரைச் சார்ந்ததாகும். மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. பட்லினா சிடேக் (Fadhlina Sidek) மலேசியக் கல்வி அமைச்சராகப் பதவியில் அமர்த்தப்பட்டார்.[1] மலேசிய உயர்கல்வி அமைச்சுமலேசிய கல்வி அமைச்சு உருவாக்கப்பட்ட 1955-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pendidikan) என்று பொதுவாக அழைக்கப்படது. அந்த அமைச்சு கல்வித்துறை தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருந்தது. 2004-ஆம் ஆண்டில், மலேசியக் கல்வி அமைச்சு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவின் பெயர் மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pelajaran). அந்த அமைச்சு பாலர் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. மற்றொரு பிரிவின் பெயர் மலேசிய உயர்கல்வி அமைச்சு (Ministry of Higher Education). பிரதமர் நஜீப் ரசாக் (Prime Minister Najib Razak) பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தில், இரண்டு அமைச்சுகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், 2015-இல் மீண்டும் இரு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாகச் செயல்படுகின்றன. அமைச்சர்களின் பட்டியல்கல்வி அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர். அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia