மாங்கனீசு சிடீயரேட்டு (Manganese stearate) C36H70MnO4
என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மாங்கனீசு சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3]
தயாரிப்பு
சோடியம் ஐதராக்சைடுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து அதைத் தொடர்ந்து மாங்கனீசு குளோரைடுடன் வினைபுரியச் செய்தால் மாங்கனீசு சிடீயரேட்டு உருவாகிறது.[4]
மாங்கனீசு((II) அசிட்டேட்டுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[5]
இயற்பியல் பண்புகள்
மாங்கனீசு சிடீயரேட்டு வெளிர் இளஞ்சிவப்பு நிற தூளாக உருவாகிறது..[6]