பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு(Potassium hypomanganate) என்பது K3MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் மாங்கனேட்டு(V) என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். அடர்நீல நிறத்தில் உள்ள இவ்வுப்பு பொட்டாசியம் மாங்கனேட்டு(V) உப்புக்கு ஓர் அரிதான உதாரணமாகும்.
தயாரிப்பு
பொட்டாசியம்பெர்மாங்கனேட்டுடன் அதிக அளவு பொட்டாசியம் சல்பைட்டைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டைத் தயாரிக்கலாம் [1]
MnO− 4 + SO2− 3 + H2O → MnO3− 4 + SO2− 4 + 2 H+.
பொட்டாசியம்பெர்மாங்கனேட்டுடன் 10 மோல் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலிலுள்ள ஐதரசன்பெராக்சைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்[2]
ஐப்போமாங்கனேட்டு எதிர்மின் அயனி விகிதச்சமமாதலின்மையால் எல்லாவிடத்திலும் குறிப்பாக காரக் கரைசல்களில் நிலைத்தன்மையற்றதாக உள்ளது. pH 14 இல் மின்வாய் ஆற்றல் மதிப்பு பின்வருமாறு:[1] estimated electrode potentials at pH 14 are[3][4][5]
MnO2− 4 + e− MnO3− 4E = +0.27 V
MnO3− 4 + e− + 2 H2O MnO2 + 4 OH−E = +0.96 V
புரோட்டானேற்றம் பெற்ற ஓர் இடைநிலை வழியாகவே விகிதச்சமமாதலின்மை அடைதல் நிகழ்வதாக நம்பப்படுகிறது[5].
HMnO2−4 ⇌ MnO3−4 + H+ என்ற வினையின் காடித்தன்மை எண் மதிப்பு pKa = 13.7 ± 0.2[6]. இருப்பினும் K3MnO4 படிகமானது ஐப்போமாங்கனேட்டு அயனியின் புற ஊதா- கட்புல நிறமாலையியல் ஆய்வை அனுமதித்து Ca2Cl(PO4) உடன் இணைபடிகமாகிறது[7].
↑Lee, Donald G.; Chen, Tao (1989), "Oxidation of hydrocarbons. 18. Mechanism of the reaction between permanganate and carbon-carbon double bonds", J. Am. Chem. Soc., 111 (19): 7534–38, doi:10.1021/ja00201a039.
↑Weast, Robert C., ed. (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ed.). Boca Raton, FL: CRC Press. p. D-134. ISBN0-8493-0462-8..
↑ 5.05.1Sekula-Brzezińska, K.; Wrona, P. K.; Galus, Z. (1979), "Rate of the MnO4−/MnO42− and MnO42−/MnO43− electrode reactions in alkaline solutions at solid electrodes", Electrochim. Acta, 24 (5): 555–63, doi:10.1016/0013-4686(79)85032-X.
↑Rush, J. D.; Bielski, B. H. J. (1995), "Studies of Manganate(V), -(VI), and -(VII) Tetraoxyanions by Pulse Radiolysis. Optical Spectra of Protonated Forms", Inorg. Chem., 34 (23): 5832–38, doi:10.1021/ic00127a022.
↑Carrington, A.; Symons, M. C. R. (1956), "Structure and reactivity of the oxy-anions of transition metals. Part I. The manganese oxy-anions", J. Chem. Soc.: 3373–80, doi:10.1039/JR9560003373.