மாங்கனீசு(II) நைட்ரேட்டு
மாங்கனீசு(II) நைட்ரேட்டு (Manganese(II) nitrate) என்பது Mn(NO3)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒவ்வொரு வாய்ப்பாட்டு அலகும், ஒரு Mn2+ நேர்மின் அயனியும் இரண்டு NO3−NO3− எதிர்மின் அயனியும் சேர்ந்து உருவாகிறது. பொதுவாக நான்கு நீரேற்று வகை Mn(NO3)2·4H2O பரவலாகக் காணப்பட்டாலும் நீரிலி வகைச் சேர்மத்துடன் ஒரு நீரேற்று மற்றும் அறுநீரேற்றுகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. இவற்றில் சில சேர்மங்கள் மாங்கனீசு ஆக்சைடு தயாரிப்பதற்கான முன்னோடிகளாக விளங்குகின்றன[1]. தயாரிப்புமாங்கனீசு கார்பனேட்டை நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரைத்து மாங்கனீசு(II) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. :
மாங்கனீசு ஈராக்சைடு மற்றும் நைட்ரசன் ஈராக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் மாங்கனீசு(II) நைட்ரேட்டு தயாரிக்கலாம். பண்புகள்மாங்கனீசு(II) நைட்ரேட்டின் நீர்த்த கரைசல்களை 300° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது இச்சேர்மம் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு MnO2 மற்றும் NO2 ஆகியச் சேர்மங்களைத் தருகிறது. மேலும் அதிகமான வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் MnO2 ஆக்சிசனை இழந்து Mn2O3 மற்றும் Mn3O4. சேர்மங்களாக மாறுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia