மாங்கனீசு(II) குளோரேட்டு (Manganese(II) chlorate) Mn(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நீர்த்த கரைசல்களில் கூட மாங்கனீசு(II) குளோரேட்டு நிலைப்புத்தன்மை இல்லாமல் காணப்படுகிறது. ஓர் அறுநீரேற்றாக இது −18° செல்சியசு வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படுகிறது. இவ்வெப்பநிலைக்கு மேல் இது உருகத் தொடங்கி அதிதீவிர வெடிபொருளாக இளஞ்சு சிவப்பு நிறத்திற்கு மாறுகிறது.[2]
தயாரிப்பு
மாங்கனீசு(II) சல்பேட்டுடன்பேரியம் குளோரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாங்கனீசு(II) குளோரேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது:[3] விளைபொருளை வெற்றிடத்தில் கொதிக்க வைப்பதன் மூலம் அதிலுள்ள தண்ணீர் அகற்றப்படுகிறது. பின்னர் வெப்பநிலை -80 ° செல்சியசு அளவுக்குக் குறைக்கும்போது இளஞ்சிவப்பு நிறத் திண்மமாக மாங்கனீசு(II) குளோரேட்டு கிடைக்கிறது. பின்னர் விளைபொருளில் உள்ள சிதைவு பொருட்களை அகற்ற திரவ நைட்ரசன் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சுத்தம் செய்யப்படுகிறது.[2]
பண்புகள்
மாங்கனீசு(II) குளோரேட்டு ஒரு திடப்பொருளாக இருக்கும்போது அறுநீரேற்றை உருவாக்குகிறது. இந்நிலையில் நீரை அகற்ற முடியாது. 6° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது சிதைவடைந்து மாங்கனீசு(IV) ஆக்சைடு, குளோரின் டை ஆக்சைடு மற்றும் தண்ணீராக மாறுகிறது. திரவ வடிவில் இருக்கும்போது மிகவும் பிசுபிசுப்பானதாகவும் தீவிர வெடிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அறை வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது இது வெடிக்கிறது.[2]
↑R. D. W. Kemmitt; R. D. Peacock; J. C. Bailar; H. J. Emeléus; Ronald Nyholm (January 26, 2016). Nyholm, Nyholm (ed.). The Chemistry of Manganese, Technetium and Rhenium (in English). Elsevier Science. p. 226. ISBN9781483187624.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)