வகுரப்பம்பட்டி
வகுரப்பம்பட்டி (Vagurappampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். அமைவிடம்வகுரப்பம்பட்டி, மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மொரப்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°13'02.4"N 78°17'28.5"E[1] ஆகும். மக்கள் வகைபாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 1214 வீடுகள் இருந்தன. அப்போது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4869 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2317 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2552 என்றும் இருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 60.5 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். ஊரில் உள்ள கோயில்கள்மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia