வடக்கு வள்ளியூர்
இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[4] அமைவிடம்வடக்குவள்ளியூர், திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; நாகர்கோவிலிலிருந்து 34 கி.மீ தொலைவிலும்; இராதாபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; களக்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; திசையன்விளையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூர் தொடருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 மக்கள்தொகையும் கொண்டது. [6] வெளி இணைப்புகள்ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia