வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி
வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி (Bardhaman–Durgapur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலும் பர்தமான் மாவட்டத்தில் பரவியுள்ளது. வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தில் உள்ளன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலும் உள்ளன. எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, பர்த்வான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதி மற்றும் துர்காபூர் மக்களவைத் தொகுதி ஆகியவை 2009 முதல் நீக்கப்பட்டு புதிய தொகுதிகளாக கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி மற்றும் வர்த்தமான் துர்க்காப்பூர் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டன.[2] கண்ணோட்டம்![]() வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி ஒரு புதிய மக்களவைத் தொகுதியாகும். இதில் வர்த்தமான் மற்றும் துர்காபூர் நகரங்களும் இடைநிலை கிராமங்கள் இரண்டும் அடங்கும்.[3] இந்த மக்களவை தொகுதியில் 15.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72 சதவீதம் பேர் கிராமப்புற வாக்காளர்களும் 7.61 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.[3] சட்டமன்றத் தொகுதிகள்வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண். 39) பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முந்தைய ஆண்டுகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துர்காபூர் மக்களவைத் தொகுதி, வர்த்தமான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதியினைப் பார்க்கவும். தேர்தல் முடிவுகள்2024
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia