கத்தல் மக்களவைத் தொகுதி (Ghatal Lok Sabha constituency) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் 543 தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தல் பகுதியினை அடிப்படையாகக் கொண்டது. கத்தல் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒரு தொகுதி கிழக்கு மிட்னாபூரிலும் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, பன்சுகுரா மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, புதிதாகக் கத்தல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.[2] 1951 முதல் 1977 வரை கத்தல் தொகுதி செயல்பாட்டிலிருந்தது.
சட்டமன்றத் தொகுதிகள்
கத்தல் மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 32) பின்வரும் சட்டமன்றப் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3]
↑"Combined List of Members". First Lok Sabha to Thirteenth Lok Sabha. Parliament of India. Archived from the original on 27 June 2013. Retrieved 3 June 2014.