செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். பட்டியலை இந்த இணைப்பில் காணுங்கள்:- பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
44 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.
வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்
முன்பதிவு
கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்தல் அவசியம்.
எளிய முறைக்கான பரிந்துரை
பரிந்துரை:
கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
புதிதாக எழுதும்போது, மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை உருவாக்குவது வரவேற்கப்படுகிறது. ஏனெனில் தகவல்கள் இற்றைப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.
ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமிக்க வேண்டும் (பதிப்பிடுதல்).
அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்யலாம்.
பலன்கள்:
அதிகப்படியான தகவல்களை திருத்தும்போது ஏற்படும் சலிப்பை தவிர்க்க இயலும்.
முக்கியத் தகவல்களை கட்டுரையில் இருக்கவைக்க எளிதாக இருக்கும்.
முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
கட்டுரையின் அமைப்பு
தகவற் பெட்டி இருத்தல் நல்லது
முன்னுரை
5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
மேற்கோள்கள்
உகந்த பகுப்புகள்
உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்
செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு
{{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.
குறிப்பு: செம்மைப்படுத்துதல் பணியைச் செய்யும் பயனர், அந்தக் கட்டுரையை முடித்துவிட்டதாக பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடும் நாள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
☆ இந்தக் கட்டுரையானது ஏற்கனவே பயனர் ஒருவரால் உரை திருத்தம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும். ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, கூடுதலாக செம்மைப்படுத்துதல் நடந்தது. எனவே திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை என அறிவிக்கப்பட்டது.