சூரிய நமஸ்காரம் அல்லது சூரியனுக்கு வணக்கம் ( Sun Salutation)[1][2] , என்பது பன்னிரண்டு இணைக்கப்பட்ட ஆசனங்களின் ஓட்ட வரிசையை உள்ளடக்கிய உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும் ஒரு பயிற்சியாகும்.[3][4] ஆசன வரிசை முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யோகாசனமாக பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவில் இதே போன்ற பயிற்சிகள் பயன்பாட்டில் இருந்தன. எடுத்துக்காட்டாக மல்யுத்த வீரர்கள் மத்தியில். 12 ஆசனங்களின் தொகுப்பு இந்து தெய்வமான சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சில இந்திய மரபுகளில், நிலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு மந்திரத்துடன் தொடர்புடையவை.
சூரிய வணக்கத்தின் துல்லியமான தோற்றம் நிச்சயமற்றது. ஆனால் இந்த வரிசையானது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவுந்த் அரசன் பவன்ராவ் சிரீனிவாசராவ் பந்த் பிரதிநிதி என்பவரால் பிரபலமடைந்தது. மேலும், மைசூர் அரண்மனையில் யோக குருவாக இருந்த கிருஷ்ணமாச்சாரி என்பவரால் யோகக் கலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பட்டாபி ஜோயிஸ் மற்றும் பி. கே. எஸ். அய்யங்கார் உட்பட கிருஷ்ணமாச்சாரியரால் கற்பிக்கப்படும் முன்னோடி யோகா ஆசிரியர்கள், உலகெங்கிலும் உள்ள தங்கள் மாணவர்களுக்கு சூரிய வணக்கத்திலிருந்து பெறப்பட்ட ஆசனங்களுக்கு இடையில் மாற்றங்களை கற்பித்தனர்.
சொற்பிறப்பியலும், தோற்றமும்
சூர்ய நமஸ்காரம் என்ற பெயர் சமசுகிருத வார்த்தையிலிருந்து வந்தது.[5]இந்து சமயத்தில் சூரியனுக்குரிய தெய்வமாக சூரிய தேவன் வணங்கப்படுகிறார். இது சூரியனை அனைத்து உயிர்களுக்கும் ஆன்மாவாகவும் ஆதாரமாகவும் அடையாளப்படுத்துகிறது.[6][7] சந்திர நமஸ்காரம் என்பதும் இதே போலவே வந்தது.[8]
இராமாயணத்தின் "யுத்த காண்டம்" 107 இல் விவரிக்கப்பட்டுள்ள,[9][10][11]ஆதித்தியயிருதயம் போன்ற பழமையான ஆனால் எளிமையான சூரிய வணக்கங்கள் நவீன வரிசையுடன் தொடர்புடையவை அல்ல.[12] ஜோசப் ஆல்டர் என்ற மானுடவியலாளர், சூரிய வணக்கம் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்த ஹத யோக உரையிலும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்.[13] அந்த நேரத்தில், சூரிய வணக்கம் யோகக் கலையாக கருதப்படவில்லை. அதன் தோரணைகள் ஆசனங்களாக கருதப்படவில்லை; யோகாவை உடற்பயிற்சியின் முன்னோடியான யோகேந்திரர், சூரிய வணக்கத்தை யோகக் கலையுடன் "கண்மூடித்தனமாக" கலப்பதை "தகவல் இல்லாதவர்கள்" செய்வதை போன்றது என விமர்சித்து எழுதினார்.[14]
சூரிய வணக்கத்தின் தோற்றம் தெளிவற்றது; இந்தியப் பாரம்பரியம் 17 ஆம் நூற்றாண்டின் துறவி இராம்தாசரை எந்த இயக்கங்களைப் பின்பற்றினார் என்பதை வரையறுக்காமல் சூரிய நமஸ்கார பயிற்சிகளுடன் இணைக்கிறது.[15] அவுந்த் அரசன் பவன்ராவ் சிறீனிவாசராவ் பந்த் பிரதிநிதி, 1928 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது புத்தகமான தி டென்-பாயின்ட் வே டு ஹெல்த்: சூர்ய நமஸ்கார்ஸ் என்ற புத்தகத்தில் இந்த நடைமுறையை பிரபலப்படுத்தி, பெயரிட்டார்.[16][14][17][18]. பந்த் பிரதிநிதி இதை கண்டுபிடித்தார் என்று வலியுறுத்தப்பட்டது.[19] ஆனால் இது ஏற்கனவே ஒரு பொதுவான மராத்தி பாரம்பரியம் என்று பந்த் கூறினார்.[20]
19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலான ஸ்ரீதத்வநிதியில் (வியாயமா தீபிகா) விவரிக்கப்பட்டுள்ள[21] "தண்டால்" எனப்படும் பாரம்பரிய மற்றும் "மிகப் பழமையான" இந்திய மல்யுத்தப் பயிற்சிகளைப் பயன்படுத்தினார் என்று யோகா அறிஞர்-பயிற்சியாளர் நார்மன் சோமன் பரிந்துரைத்தார். வெவ்வேறு தண்டால்கள் சூரிய வணக்க ஆசனங்களான தடாசனம், பாத அஸ்தாசனம், சதுரங்க தண்டாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றை ஒத்திருக்கின்றன.[22] மைசூர் அரண்மனையில் உள்ள அவரது யோகாசாலையை ஒட்டிய மண்டபத்தில் வழக்கமான வகுப்புகள் நடத்தப்பட்டதால், கிருஷ்ணமாச்சாரி சூரிய வணக்கம் பற்றி அறிந்திருந்தார்.[23][24][25] யோக அறிஞர் மார்க் சிங்கிள்டன் , "கிருஷ்ணமாச்சாரி தனது மைசூர் யோக பாணியின் அடிப்படையாக சூரிய வணக்கத்தின் பாயும் அசைவுகளை உருவாக்கினார்" எனக் கூறுகிறார். [26] அவரது மாணவர்களான நவீன கால அஷ்டாங்க வின்யாச யோகக்கலையை உருவாக்கிய கே. பட்டாபி ஜோயிஸ், [27][28] மற்றும் ஐயங்கார் யோகக் கலையை உருவாக்கிய பி.கே.எஸ். ஐயங்கார், இருவரும் கிருஷ்ணமாச்சாரியிடமிருந்து சூரிய வணக்கம் மற்றும் ஆசனங்களுக்கு இடையில் வின்யாச அசைவுகளைக் கற்றுக்கொண்டனர்.[25]
விஷ்ணுதேவானந்தர் என்பவரால் 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகமான தி கம்ப்ளீட் இல்லஸ்ட்ரேட்டட் புக் ஆஃப் யோகா " என்பதில் "சூர்ய வணக்கத்தின் புதிய பயன்பாட்டுக் கருத்தாக்கம்" [29][30] என்றும் இது அவரது குரு சிவானந்தர் என்பவரால் முதலில் சூரிய ஒளி மூலம் ஒரு ஆரோக்கிய குணமாக விளம்பரப்படுத்தப்பட்டது என்றும் நவீன யோகக் கலையின் வரலாற்றாசிரியர் எலியட் கோல்ட்பர்க் இவ்வாறு எழுதுகிறார்.[29][30] புத்தகத்தில் புகைப்படங்களுக்காக சூரிய வணக்கத்தின் நிலைகளை விஷ்ணுதேவானந்தர் மாதிரியாகக் கொண்டதாகவும் "பல நோய்களுக்கான சிகிச்சை அல்ல, ஆனால் உடற்பயிற்சி" என்பதை அவர் அங்கீகரித்தார் என்றும் கோல்ட்பர்க் குறிப்பிடுகிறார். [29]
விளக்கம்
இந்தியாவின் கட்னியில் நடந்த பொது யோகா நிகழ்ச்சியில் சூரிய வணக்கம்
சூரிய வணக்கம் என்பது பள்ளிகளுக்கு இடையில் ஓரளவு மாறுபடும். குதித்தல் அல்லது நீட்டுதல் ஆகியவற்றால் இணைக்கப்பட்ட சுமார் பன்னிரண்டு யோக ஆசனங்களின் வரிசையாகும். ஐயங்கார் யோகாவில், அடிப்படை வரிசையானது தாடாசனம், ஊர்த்வ ஹஸ்தாசனம், உத்தனாசனம், தலையை உயர்த்தும் உத்தனாசனம், அதோ முக சுவனாசனம் , ஊர்த்வ முக சுவனாசனம் , சதுரங்க தண்டாசனம் போன்றவை.[5]
பயிற்சி
சூரிய நமஸ்காரமானது பொதுவாக காலை அல்லது மாலை நேரத்தில் உணவருந்தும் 2 மணி நேர இடைவேளிக்குப் பிறகு மட்டுமே செய்யப்பட வேண்டும்.[31]
சூரிய நமஸ்காரங்களை தரையில் அல்லாமல் விரிப்பில் செய்யவேண்டும்.
சில பாரம்பரியங்களில் ஒரே பயிற்சியில் 12 சூரிய நமஸ்காரங்கள் நிகழ்த்தப்படுகிறது. முதல் முறையாக இந்தப் பயிற்சியைத் தொடங்கினால் வழக்கமாக ஒவ்வொரு நாளும் சில (3 முதல் 6) நமஸ்காரங்கள் மட்டுமே செய்ய வேண்டும். பிறகு ஒரு வார காலத்தில் படிப்படியாய் 12 நமஸ்காரங்களாக உயர்த்த வேண்டும்.[32]
பயிற்சியின் இறுதியில் ஓய்வெடுக்கும் போது சவாசனத்தைச் செய்ய வேண்டும்.சூரிய நமஸ்காரத்திற்குப் பிறகு ஓய்வெடுப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்ட சவாசனம்
மூச்சோட்டம் (பிரணாயாமங்கள்) கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இது ஆசனங்களுடன் ஒரே சமயத்தில் செயல்படுத்தப்படுகிறது.
மந்திரங்கள் ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தில் தொடக்கத்திலும் உச்சரிக்கப்படும். அதைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
சூரிய நமஸ்காரத்தின் அதே சுழற்சியில் சில ஆசனங்கள் இருமுறை மீண்டும் மீண்டும் வருகிறது. சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்களின் வரிசையில் மொத்தம் 8 ஆசனங்கள் உள்ளன.
யோகாசனங்களின் (தோரணை அல்லது நிலை) பயிற்சியானது பொதுவாக சூரிய நமஸ்கார பயிற்சியைத் தொடர்ந்தே வருகிறது.[33]
பாரம்பரியமான இந்து சூழல்களில் சூரிய நமஸ்காரமானது சூரியன் உதிக்கும் அல்லது மறையும் திசையைப் பார்த்தே எப்போதும் செயல்படுத்தப்படுகிறது.
வரிசைத் தொகுப்பு
வீடியோ
ஆசனம்
மூச்சோட்டம்
உருவப்படங்கள்
1
பிராணமாசனம் (இறைவணக்க நிலை)
மூச்சை வெளியிடுதல்
2
அஸ்த உட்டனாசனம் (உயர்த்தப்பட்ட கைளுடன் நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்
3
அஸ்தபாதாசனம் (முன்னோக்கிய நிலையின் குனிந்தவாறு நிலை)
மூச்சை வெளியிடுதல்
4
அஸ்வ சஞ்சலாசனம் (குதிரையேற்றம் சார்ந்த நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்
5
துவி பாத அஸ்வ சஞ்சலாசனம் (நான்கு-கரங்கள் உள்ள பணியாளர் நிலை)
அத முக்த ஸ்வானாசனம் (கீழ்முகம் பாக்கும் நாய் போன்ற நிலை)
மூச்சை வெளியிடுதல்
9
அஸ்வ சஞ்ச்சலனாசனம் (குதிரையேற்றம் சார்ந்த நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்
10
அஸ்தபாதாசனம் (முன்புறம் வளைந்து குனிந்தவாறு உள்ள நிலை)
மூச்சை வெளியிடுதல்
11
அஸ்த உட்டனாசனம் (உயர்த்தப்பட்ட கைகளையுடைய நிலை)
மூச்சை உள்ளிழுத்தல்
12
பிராணமாசனம் (இறைவணக்க நிலை)
மூச்சை வெளியிடுதல்
மந்திரங்கள்
சில யோக மரபுகளில், வரிசையின் ஒவ்வொரு நிலையும் ஒரு மந்திரத்துடன் தொடர்புடையது. சிவானந்த யோகம் உள்ளிட்ட மரபுகளில், படிகள் சூரியக் கடவுளின் பன்னிரண்டு பெயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன:
இந்திய பாரம்பரியம் படிகளை பீஜ ("விதை" ஒலி) மந்திரங்கள் மற்றும் ஐந்து சக்கரங்களுடன் ( நுட்பமான உடலின் மைய புள்ளிகள்) தொடர்புபடுத்துகிறது.
பிராணமாசனத்தின் போது ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தின் தொடக்கத்திலும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பின்வருமாறு.
आदित्यस्य नमस्कारान, येकुर्वन्ती दिने दिने |
आयु: प्रद्न्या बलं वीर्यं, तेज:स्ते शांच जायते ||
பிரபல கலாச்சாரத்தில்
அஷ்டாங்க வின்யாச யோகாவின் நிறுவனர் கே. பட்டாபி ஜோயிஸ், "சூரிய வணக்கம் இல்லாமல் அஷ்டாங்க யோகா இல்லை, இது சூரிய கடவுளுக்கு இறுதி வணக்கம்" என்று கூறினார். [34]
2019 ஆம் ஆண்டில், டார்ஜிலிங்கில் இருந்து மலையேறிய பயிற்றுனர்கள் குழு எல்ப்ரஸ் மலையின் உச்சியில் ஏறி 18,600 அடிகள் (5,700 m) உயரத்தில் சூரிய வணக்கத்தை நிறைவு செய்தது உலக சாதனையாகக் கூறப்பட்டது.
↑S. P. Sen, Dictionary of National Biography; Institute of Historical Studies, Calcutta 1972 Vols. 1–4; Institute of Historical Studies, Vol 3, page 307
Mujumdar, Dattatraya Chintaman, ed. (1950). Encyclopedia of Indian Physical Culture: A Comprehensive Survey of the Physical Education in India, Profusely Illustrating Various Activities of Physical Culture, Games, Exercises, Etc., as Handed Over to Us from Our Fore-fathers and Practised in India. Good Companions.