1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1932 Summer Olympics), அலுவல்முறையாக பத்தாம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the X Olympiad) அமெரிக்க ஐக்கிய நாடு கலிபோர்னியா மாநிலத்தின் லாசு ஏஞ்சலசு நகரில் 1932ஆம் ஆண்டு சூலை 30 முதல் ஆகத்து 14 வரை நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை ஏற்று நடத்த வேறெந்த நாடும் முன்வரவில்லை. உலகளவிலான பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது நடத்தப்பட்டதால் பல நாடுகளும் விளையாட்டு வீரர்களும் லாசு எஞ்செலச் வரை பயணிக்க பணம் இல்லாதவர்களாக இருந்தனர். ஆம்ஸ்டர்டம் நகரில் 1928இல் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் எர்பெர்ட் ஹூவர் கூட பங்கேற்கவில்லை.[1] ஒருங்கிணைப்புக் குழு தங்கள் அறிக்கையில் விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவினங்களை வெளியிடவில்லை; இருப்பினும் அக்கால செய்தித் தாள்கள் இதில் US$1,000,000 இலாபம் கண்டதாக குறிப்பிட்டன. [1] பங்கேற்ற நாடுகள்![]() ![]() 1932 ஒலிம்பிக்கில் மொத்தம் 37 நாடுகள் பங்கேற்றன. கொலம்பியா முதன்முதலாக பங்கேற்றது. 1924 போட்டிகளில் பங்கேற்க இயலாது போன சீனக் குடியரசும் இந்தப் போட்டிகளில் முதன் முதலாக ஒற்றைப் போட்டியாளரை அனுப்பி பங்கேற்றது. பதக்கங்கள்1932ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மிகக் கூடுதலான பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia