1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மாசுக்கோவில் சூலை 19 முதல் ஆகத்து 3 வரை நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பாகும். இப்பன்னாட்டு விளையாட்டுப் போட்டி XXII ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் இதுவாகும். சோவியத் ஒன்றியம் 1979ல் ஆப்கானித்தானின் மீது படையெடுத்ததைக் கண்டித்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் உந்துதலால் அமெரிக்கா தலைமையில் 65 நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்தன. எனினும் சில நாடுகளின் வீரர்கள் இப்போட்டியில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். இப்புறக்கணிப்பால் சோவியத் ஒன்றியம் தலைமையில் பொதுவுடமை நாடுகள் 1984ல் நடந்த ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன. 80 நாடுகள் மாசுக்கோ போட்டியில் பங்கேற்றன. 1956 க்குப் பிறகு இதுவே குறைந்த அளவு நாடுகள் பங்கு பெறும் ஒலிம்பிக் ஆகும். அங்கோலா, போட்சுவானா, சோர்தான், லாவோசு, மொசாம்பிக், சீசெல்சு ஆகிய 6 நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன. சைப்ரசுக்கு இது முதல் கோடைக்கால ஒலிம்பாக இருந்த போதிலும் 1980ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் முன்னரே அது பங்கு பெற்றது. சிலோன் என்ற பெயரை சிறி லங்கா என்று மாற்றிய பிறகு அந்நாடு கலந்து கொண்ட முதல் ஒலிம்பிகாகும். ரோடிசியா என்ற பெயரை சிம்பாப்வே என்று மாற்றிய பிறகு அந்நாடு கலந்து கொண்ட முதல் ஒலிம்பிகாகும். பெனின் முன்பு டாகோமே என்று போட்டியிட்டது. தென் ஆப்பிரிக்காவின் இனவெறி கொள்கையை எதிர்த்து 1974 ஒலிம்பிக்கை புறக்கணித்த 24 நாடுகளில் பாதி இதில் கலந்துகொண்டன. சோவியத் ஒன்றியம் 1979ல் ஆப்கானித்தானின் மீது படையெடுத்தை கண்டித்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் உந்துதலால் 1980 ஒலிம்பிக்கை புறக்கணித்த நாடுகள் பிலடெல்பியா நகரில் சுதந்திர மணி கிளாசிக் என்று வேறொரு போட்டிப் போட்டியை நடத்தின. போட்டியில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்ட 65 நாடுகள் 1980 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. பெரும்பாலானவை அமெரிக்காவின் உந்துதலால் ஒலிம்பிக்கை புறக்கணித்தன, சில பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களால் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை[1]. புறக்கணித்த 15 நாடுகள் தங்கள் நாட்டு கொடியின் கீழ் போட்டியிடாமல் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டன. நியூசிலாந்து[2] தங்கள் நாட்டு கொடியின் கீழ் போட்டியிட்டது. 1979ம் ஆண்டு கத்தார் ஒலிம்பிக் ஆணையகம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அது பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தால் 1980ல் ஏற்றுக்கொள்ளப்படாததால் கத்தார் இப்போட்டியில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு1980ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த மாசுக்கோவும் லாஸ் ஏஞ்சலசும் மட்டுமே போட்டியிட்டன. அக்டோபர் 23, 1974 ல் வியன்னாவில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 75வது அமர்வில் மாசுக்கோ தேர்வு பெற்றது.[3]
பதக்கப் பட்டியல்* போட்டியை நடத்தும் நாடு சோவியத் ஒன்றியம்
*** - ஒலிம்பிக் கொடியின் கீழ் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia