1954 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1954 பிஃபா உலகக்கோப்பை (1954 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஐந்தாவது பதிப்பாகும். இப்போட்டிகள் சுவிட்சர்லாந்தில் 1954 சூன் 16 முதல் சூலை 4 வரை நடைபெற்றன. இப்போட்டிகளின் புரவல நாடாக சுவிட்சர்லாந்து 1946 சூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இறுதிப் போட்டியில் மேற்கு செருமனிஅங்கேரியை 3–2 என்ற கணக்கில் வென்று தனது முதலாவது உலகக்கோப்பையைப் பெற்றது.
தகுதி பெற்ற அனிகள்
பின்வரும் 16 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன: