2022 உலகக்கோப்பை காற்பந்து
2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 பிஃபா உலகக் கோப்பை (2022 FIFA World Cup) பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2022 நவம்பர் 20 முதல் திசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெற்ற இந்தப் போட்டித்தொடர் 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். அரபு நாடொன்றில் உலகக்கிண்ணம் முதன் முறையாக நடைபெற்ற நிகழ்வாகும்.[1] 2002 ஆம் ஆண்டு தென் கொரியா, யப்பான் ஆகிய நாடுகளில் நடந்த போட்டிக்குப் பிறகு முற்றிலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது உலகக் கோப்பையாகும்.[a] பிரான்சு 2018 இறுதிப் போட்டியில் குரோவாசியாவை 4–2 ஆக வென்று நடப்பு வாகையாளராக இப்போட்டிகளில் கலந்து கொண்டது. $220 பில்லியனுக்கும் மேலான செலவில்,[2] இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் அதிக செலவில் நடத்தப்பட்ட உலகக்கோப்பைப் போட்டிகள் இதுவாகும். ஆனாலும் $8பில்லியன் மட்டுமே செலவு எனக் கத்தார் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏனைய செலவுகள் 2010 இல் கத்தாருக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டதிலிருந்து ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பானது எனக் கூறப்படுகிறது.[3] 2022 போட்டிகள் 32 அணிகள் கலந்து கொண்ட கடைசிப் போட்டியாகும். ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் 2026 போட்டிகளுக்கான களம் 48 அணிகளாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கத்தாரின் வெப்பமான காலநிலையின் தீவிரத்தைத் தவிர்ப்பதற்காக,[b] இந்த உலகக் கோப்பை நவம்பர் பிற்பகுதியில் இருந்து திசம்பர் நடுப்பகுதி வரை நடத்தப்படுகிறது.[c] இது 29 நாட்கள் குறைக்கப்பட்ட காலக்கெடுவில் 64 போட்டிகள் கத்தாரின் ஐந்து நகரங்களில் எட்டு விளையாட்டரங்குகளில் விளையாட்டன. கத்தார் அணி புரவல நாடு என்ற முறையில், தகுதிச் செயல்முறையால் தீர்மானிக்கப்பட்ட 30 அணிகளுடனும், நடப்பு வாகையாளர் பிரான்சுடனும் இணைந்து தமது முதல் உலகக் கோப்பை நிகழ்வில் தானாகவே நுழைந்தது. கத்தார் மூன்று குழுப் போட்டிகளிலும் தோல்வியடைந்ததன் மூலம், தங்கள் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த முதல் புரவல நாடாகவும், அல்லது நடத்தும் நாடு வெளியேறியது.[6][7] 2010 போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்ததாக குழுநிலையிலேயே வெளியேறிய இரண்டாவது அணியாக கத்தாரும் வெளியேறியது.[8] இறுதிப் போட்டியில் அர்கெந்தீனா, நடப்பு வாகையாளரான பிரான்சை மேலதிக நேரம் வரை 3–3 சமநிலையில் இருந்த நிலையில், 4–2 என தண்ட உதைகளில் வென்று மூன்றாவது தடவையாக உலகக்கோப்பையைப் பெற்றுக் கொண்டது. 1966 இறுதிப் போட்டியில் சோப் அர்சுட்டிற்குப் பின்னர் பிரெஞ்சு வீரர் கிலியான் எம்பாப்பே இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்த முதல் வீரராகவும், இச்சுற்றில் அதிக கோல்களை (எட்டு) எடுத்து தங்கக் காலணியைப் பெற்ற வீரராகவும் சாதனை படைத்தார். அர்கெந்தீன அணித் தலைவர் லியோனல் மெசி சுற்றின் சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதைப் பெற்று தங்கப் பந்தையும் பெற்றுக் கொண்டார். புரவல நாடு தேர்வு2018 மற்றும் 2022 உலகக் கோப்பைகளை நடத்துவதற்கான ஏல நடைமுறை 2009 சனவரியில் தொடங்கியது, நாடுகள் தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்ய 2009 பிப்ரவரி 2 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.[9] தொடக்கத்தில், 2018 உலகக் கோப்பைக்காக பதினொரு ஏலங்கள் பெறப்பட்டன, ஆனால் மெக்சிகோ பின்னர் விலகியது,[10][11] இந்தோனேசிய கால்பந்து சங்கம் இந்தோனேசிய அரசாங்க உத்தரவாதக் கடிதத்தை சமர்ப்பிக்கத் தவறியதால், பிப்ரவரி 2010 இல் இந்தோனேசியாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.[12] இறுதியில், 2022 உலகக் கோப்பைக்காக ஆத்திரேலியா, சப்பான், கத்தார், தென் கொரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் போட்டியிட்டன. 22 உறுப்பினர்களைக் கொண்ட பீஃபா நிர்வாகக் குழு 2010 திசம்பர் 2 அன்று சூரிக்கில் கூடியது.[13] பீஃபா செயற்குழு உறுப்பினர்கள் இருவர் வாக்கெடுப்புக்கு முன் அவர்களின் வாக்குகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[14] 2022 உலகக் கோப்பையை கத்தாரில் நடத்துவதற்கான முடிவு, "அதிக செயல்பாட்டு அபாயம்" என்று தரப்படுத்தப்பட்டமை,[15] ஊடக வர்ணனையாளர்களிடமிருந்து விமர்சனத்தை உருவாக்கியது.[16] பீஃபாவின் ஊழல்களின் ஒரு பகுதியாக இது பலரால் விமர்சிக்கப்பட்டது.[17] கத்தார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்து முறை, மோசமான மனித உரிமைகள், தன்பால் ஈர்ப்பாளர், இருபால் ஈர்ப்பாளர், மருவிய பாலினத்தவர்களைத் துன்புறுத்துதல் போன்றவை உலக நாடுகளால் விமர்சிக்கப்பட்டது; கத்தாரின் தீவிரமான காலநிலை மற்றும் வலுவான கால்பந்து கலாச்சாரம் இல்லாமை ஆகியவை உரிமைகளை வழங்குவதற்கான கையூட்டு பரந்த பீஃபா ஊழலுக்கு சான்றாகும் என அமெரிக்காவின் நீதித்துறை குற்றம் சாட்டியது.[18] இந்த நிகழ்வை புறக்கணிப்பது தொடர்பாகப் பல நாடுகள், அணிகள் மற்றும் தனிப்பட்ட வீரர்களால் திட்டமிடப்பட்டுள்ளது, அத்துடன் முன்னாள் பிஃபா தலைவர் செப் பிளாட்டர் கத்தாருக்கு நடத்தும் உரிமைகளை வழங்குவது ஒரு "தவறு" என்று கூறினார்.[19][20] வாக்குப்பதிவு முறைகள் பின்வருமாறு:[21]
பணப் பரிசுஏப்ரல் 2022 இல், பிஃபா அனைத்து பங்கேற்கும் நாடுகளுக்கான பரிசுகளை அறிவித்தது. ஒவ்வொரு தகுதி பெற்ற அணியும் போட்டிக்கு முன் தயாரிப்புச் செலவுகளை ஈடுகட்ட 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றன. 2022 போட்டிகளின் மொத்தப் பரிசுத் தொகை முந்தைய போட்டியின் பரிசுத் தொகையான $400 மில்லியனை விட US$40 மில்லியன் அதிகமாகும்.[22]
அணிகள்தகுதிநிலைபிஃபாவின் ஆறு கண்ட கூட்டமைப்புகள் தங்கள் சொந்தத் தகுதிப் போட்டிகளை ஏற்பாடு செய்தன. தற்போதுள்ள 211 பிஃபா உறுப்பினர் சங்கங்களும், தகுதிகாண் நிலைக்கு நுழைய தகுதி பெற்றன. போட்டியை நடத்திய கத்தார் போட்டிகளின்றி தகுதி பெற்றது. இருப்பினும், முதல் இரண்டு சுற்றுகளும் 2023 ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கோப்பைக்கான தகுதியாக செயல்பட்டதால், ஆசியக் கூட்டமைப்பு கத்தாரை ஆசிய தகுதிச் சுற்றில் பங்கேற்க கட்டாயப்படுத்தியது.[23] கத்தார் தங்கள் குழுவில் வெற்றியாளர்களாக இறுதிக் கட்டத்தை எட்டியதால், ஐந்தாவது சிறந்த இரண்டாவது இடமான லெபனான் அதற்குப் பதிலாக முன்னேறியது.[24] நடப்பு உலகக் கோப்பை வாகையாளரான பிரான்சும் வழக்கம் போல் தகுதிச் சுற்றுகளை கடந்து சென்றது.[25] செயிண்ட் லூசியா தொடக்கத்தில் தகுதி-காண் சுற்றில் நுழைந்தது, ஆனால் அதன் முதல் போட்டிக்கு முன்பே அதிலிருந்து விலகியது. கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான பாதுகாப்புக் காரணமாக வட கொரியா தகுதிச் சுற்றில் இருந்து விலகியது. அமெரிக்க சமோவா, சமோவா இரண்டும் ஓசியானியா சுற்றில் இருந்து முன்கூட்டியே விலகிக் கொண்டன. 2022 உங்கா தொங்கா எரிமலை வெடிப்பு, ஆழிப்பேரலை போன்றவற்றால் தொங்காவும் விலகியது. தங்கள் அணிகளில் கோவிடு தொற்றுநோய் பரவியதால், வனுவாட்டு, குக் தீவுகளும் பின்வாங்கின. 2022 உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெற்ற 32 நாடுகளில், 24 நாடுகள் 2018 போட்டியில் பங்கேற்றன.[26] 2022 உலகக் கோப்பையில் முதற்தடவையாகப் பங்குபற்றும் ஒரே அணி கத்தார் ஆகும். 1934 இல் இத்தாலிக்குப் பிறகு நடத்தும் அணி ஒன்று தனது முதலாவது போட்டியில் பங்குபற்றுவது இது முதல் தடவையாகும். நெதர்லாந்துநெதர்லாந்து, எக்குவதோர், கானா, கமரூன், ஐக்கிய அமெரிக்கா ஆகியவை 2018 போட்டியைத் தவறவிட்ட பின்னர் இப்போது மீண்டும் போட்டிக்குத் திரும்பியுள்ளன. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா விளையாடியது.[27] வேல்சு 1958 இற்குப் பின்னர் முதல்முறையாக விளையாடியது.[28] நான்கு முறை உலக வாகையாளரும், நடப்பு ஐரோப்பிய வாகையாளருமான இத்தாலி வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது தொடர்ச்சியான உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் தவறியது.[29] பிஃபா உலகத் தரவரிசையில் அதிக தரவரிசையில் உள்ள அணியாக இத்தாலி மட்டுமே தகுதிபெறத் தவறிய முன்னாள் வாகையாளர் ஆகும். 1978 இல் செக்கோஸ்லோவாக்கியா, 1994 இல் டென்மார்க் மற்றும் 2006 இல் கிரீஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, முந்தைய ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று, வரவிருக்கும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் தவறிய நான்காவது அணியாக இத்தாலி உள்ளது.[30] உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பின் காரணமாக முந்தைய உலகக் கோப்பையை நடத்திய உருசியா, போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது.[31] 2015, 2016 கோப்பா அமெரிக்கா வெற்றியாளரான சிலி தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெறத் தவறிவிட்டது. முந்தைய மூன்று உலகக் கோப்பைகளுக்கும், கடைசி ஏழு உலகக் கோப்பைகளில் ஆறுக்கும் தகுதி பெற்றிருந்த நைசீரியா ஆப்பிரிக்கக் கூட்டமைப்பின் இறுதிச் சுற்றில் கானாவுக்கு எதிரான போட்டியில் 2022 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறத் தவறியது. 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற எகிப்து, பனாமா, கொலம்பியா, பெரு, ஐசுலாந்து, சுவீடன் ஆகிய அணிகளும் 2022 போட்டிக்கு தகுதி பெறவில்லை. குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள் போட்டிக்கு முன் பிஃபா ஆடவர் உலகத் தரவரிசையில் இறுதி நிலைகளைக் குறிப்பிடுகின்றன.[32]
இறுதிக் குலுக்கல்
விளையாட்டரங்குகள்
தொடக்க நிகழ்வுஇச்சுற்றின் தொடக்க நிகழ்வு 2022 நவம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை அல் கோர் நகரில் உள்ள அல் பைட் விளையாட்டரங்கில் கத்தாருக்கும் எக்குவதோருக்கும் இடையேயான தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெறும்.[40] இந்நிகழ்வில் பிடிஎஸ் பாடகர் ஜுங்கூக், [41] ஆங்கிலேயப் பாடகர் ரொபி வில்லியம்சு உட்படப் பலர் கலந்து கொள்வர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த கொலம்பியப் பாடகி சக்கீரா நிகழ்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் விழாவில் பங்குபற்றுவதில்லை என அறிவித்தார்.[42] குழுநிலை ஆட்டம்![]() அரையிறுதிகள் காலிறுதிகள் 16 சுற்று குழுநிலை தகுதி பெறவில்லை அல்லது பங்குபற்றவில்லை போட்டியிடும் நாடுகள் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகளாக எட்டு குழுக்களில் பிரிக்கப்பட்டன (குழு அ முதல் ஏ வரை). ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் தமக்கிடையே ஒவ்வோர் ஆட்டத்தில் தொடர் சுழல்முறையில் போட்டியிட்டு, முதலிரண்டு இடங்களில் வரும் அணிகள் வெளியேற்ற நிலைக்கு முன்னேறின.
குழு அ
கத்தார், எக்குவடோர் அணிகள் முன்னதாக மூன்று தடவைகள் தமக்கிடையே மோதியுள்ளன, கடைசியாக 2018 இல் நட்புப் போட்டியொன்றில் கத்தார் 4–3 வெற்றியைப் பெற்றது.
செனிகல், நெதர்லாந்து அணிகள் தமக்கிடையே விளையாடும் முதலாவது போட்டி இதுவாகும்.
கத்தார், செனிகல் அணிகள் தமக்கிடையே விளையாடும் முதலாவது போட்டி இதுவாகும். நெதர்லாந்தும் எக்குவடோரும் தமக்கிடையே இரு தடவைகள் விளையாடியுள்ளன, கடைசியாக 2014 நட்புப் போட்டி 1–1 ஆக சமனாக முடிவடைந்தது.
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,833 நடுவர்: முசுத்தபா கோர்பல் (அல்சீரியா) எக்குவடோர், செனிகல் ஆகிய அணிகள் முன்னதாக தமக்கிடையே இரண்டு தடவைகள் விளையாடியுள்ளன, கடைசியாக 2005 இல் நட்புப் போட்டியில் 2–1 என செனிகல் வென்றது.
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,569 நடுவர்: கிளெமென்ட் தர்ப்பின் (பிரான்சு) நெதர்லாந்து, கத்தார் அணிகள் தமக்கிடையே முதல் தடவையாக விளையாடுகின்றன.
குழு ஆ
மூலம்: பிஃபா
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 45,334 நடுவர்: ரஃபயெல் கிளாவுசு (பிரேசில்)
அகமது பின் அலி விளையாட்டரங்கம், அல் ரய்யான் நடுவர்: அப்துல்ரகுமான் அல்-யசீம் (கத்தார்) ஈரானும் வேல்சும் முன்னதாக ஒரு தடவை 1978 நடுப் போட்டியில் விளையாடி, 1–0 ஆக வேல்சி வென்றது.[44]
அகமது பின் அலி விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 40,875 நடுவர்: மரியோ எசுக்கோபார் (குவாத்தமாலா) இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா அணிகள் முன்னதாக இரு தடவைகள் உலகக்கோப்பைப் போட்டிகளில் தமக்கிடையே விளையாடியுள்ளன. 1950 போட்டியில் அமெரிக்கா 1–0 ஆக வென்றது. 2010 போட்டி 1–1 என சமமாக முடிந்தது.
அகமது பின் அலி விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,297 நடுவர்: சிலாவ்க்கோ வின்சிச் (சுலோவீனியா)
குழு இ
மூலம்: FIFA
அர்கெந்தீனாவும் சவூதி அரேபியாவும் முன்னதாக நான்கு தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன, கடைசியாக 2012 நட்புப் போட்டி 0–0 சமநிலையில் முடிந்தது. அர்கெந்தீனா தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வி அடையாத அணி என்ற சாதனையுடன் 2022 உலகக்கோப்பையில் களம் இறங்கியது.[45]
மெக்சிக்கோவும் போலந்தும் முன்னதாக எட்டுத் தடவைகள் தமக்கிடையே மோதியுள்ளன. 1978 உலக்கோப்பையில் போலந்து 3–1 வெற்றி பெற்றது. கடைசியாக 2017 நட்புப் போட்டி ஒன்றில் 1–0 வெற்றியை மெக்சிக்கோ பெற்றது.
போலந்தும் சவூதி அரேபியாவும் முன்னதாக நான்கு தடவைகள் சந்தித்துக் கொண்டன, கடைசியாக 2006 நட்புப் போட்டியில் 2–1 ஆகப் போலந்து வென்றது.
அர்கெந்தீனாவும் மெக்சிக்கோவும் கடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் மூன்று தடவைகள் தமக்கிடையே மோதிக் கொண்டன. 1930 குழுநிலையில் 6–3 ஆகவும், 2006 16-சுற்றுப் போட்டியில் 2–1 ஆகவும், 2010 16-சுற்றில் 3–1 ஆகவும் அர்கெந்தீனா வெற்றி பெற்றது.
---- போலந்தும் அர்கெந்தீனாவும் முன்னதாகத் தமக்கிடையே இரண்டு உலகக்கோப்பைப் ஆட்டங்கள் உட்பட 11 தடவைகள் விளையாடியுள்ளன. 1974 உலகக்கோப்பைக் குழுநிலைப் போட்டியில் போலந்து 3–2 ஆகவும், 1978 குழுநிலைப் போட்டியில் அர்கெந்தீனா 2–0 ஆகவும் வென்றன.
சவூதி அரேபியாவும் மெக்சிக்கோவும் தமக்கிடையே ஐந்து தடவைகள் விளையாடியுள்ளன. கடைசியாக 1999 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் 5–1 ஆக மெக்சிக்கோ வென்றது.
குழு ஈ
மூலம்: FIFA
தூனிசியாவும் தென்மார்க்கும் முன்னதாக இரு தடவைகள் மோதியுள்ளன, கடைசியாக 2002 நட்புப் போட்டி ஒன்றில் 2–1 என்ற கணக்கில் டென்மார்க் வென்றது.
கல்வி நகரம் விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 42,925 நடுவர்: சேசர் அர்த்துரோ ரமோசு (மெக்சிக்கோ) ஆத்திரேலியாவும் பிரான்சும் முன்னதாக ஐந்து தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன. 2018 உலகக்கோப்பைப் போட்டியில் பிரான்சு 2–1 வெற்றியைப் பெற்றது. 2001 கூட்டமைப்புக் கிண்ணப் போட்டியில் ஆத்திரேலியா 1–0 வெற்றியைப் பெற்றது.
அல் சானுப் விளையாட்டரங்கம், அல் வாக்ரா நடுவர்: விக்டர் கோமசு (தென்னாப்பிரிக்கா) தூனிசியாவும் ஆத்திரேலியாவும் முன்னதாக இரண்டு தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன. கடைசியாக 2005 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் தூனிசியா 2–0 என வெற்றி பெற்றது.
பிரான்சும் தென்மார்க்கும் முன்னதாக மூன்று தடவைகள் குழுநிலைப் போட்டிகளில் தமக்கிடையே மோதிக் கொண்டன. 1998 போட்டியில் பிரான்சு 2–1 ஆக வெற்றி பெற்றது. 2002 போட்டியில் தென்மார்க்கு 2–0 ஆக வெற்றி பெற்றது. 2018 போட்டி 0–0 ஆக சமநிலையில் முடிந்தது.
ஆத்திரேலியாவும் தென்மார்க்கும் கடைசியாக 2018 உலகக்கோப்பை குழுநிலைப் போட்டியில் விளையாடி 1–1 ஆக சமநிலையில் முடித்தன. ஆத்திரேலியா 2006 இற்குப் பின்னர் முதல் தடவையாக வெளியேற்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. அத்துடன், ஆத்திரேலியா முதல் தடவையாக உலகக்கோப்பை ஒன்றில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பிரான்சும் தூனிசியாவும் நான்கு தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன. கடைசியாக 200 நட்புப் போட்டியில் இரண்டும் 1–1 என சமநிலையில் முடித்துக் கொண்டன.
கல்வி நகரம் விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 43,627 நடுவர்: மெத்தியூ கொங்கர் (நியூசிலாந்து) குழு உ
மூலம்: FIFA
செருமனியும் சப்பானும் முன்னதாக இரு தடவைகள் தமக்கிடையே மோதியுள்ளன. கடைசியாக 2006 நட்புப் போட்டி ஒன்றில் 2–2 என சமநிலையில் முடித்துக் கொண்டன.
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 42,608 நடுவர்: இவான் பார்ட்டன் (எல் சால்வடோர்) எசுப்பானியாவும் கோசுட்டா ரிக்காவும் தமக்கிடையே மூன்று தடவைகள் மோதியுள்ளன, அனைத்தும் நட்புப் போட்டிகள் ஆகும். கடைசியாக 2017 இல் எசுப்பானியா 5–0 ஆக வெற்றி பெற்றது.[46]
பார்வையாளர்கள்: 40,013 நடுவர்: மொகம்மது அப்துல்லா அசன் மொகம்மது (ஐக்கிய அரபு அமீரகம்) சப்பான் நான்கு நட்புப் போட்டிகளில் கோசுட்டா ரிக்காவுடன் விளையாடியுள்ளது,[47] கடைசியாக 2018 இல் 3–0 ஆக சப்பான் வென்றது.[48]
அகமது பின் அலி விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 41,479 நடுவர்: மைக்கேல் ஒலிவர் (இங்கிலாந்து) எசுப்பானியா முன்னைய உலகக்கோப்பைப் போட்டிகளில் நான்கு தடவைகள் செருமனியுடன் விளையாடியுள்ளது. 1966 உலகக்கோப்பையில் 2–1 என்ற செருமனியின் குழுநிலை வெற்றியிலும், 1982 இல் 2–1 என்ற செருமனியின் குழுநிலை வெற்றியிலும், 1994 இல் 1–1 என்ற சமனாகவும், 2010 அரையிறுதியில் எசுப்பானியாவின் 1–0 வெற்றியிலும் முடிந்தன.
சப்பான், எசுப்பானியா அணிகள் முன்னதாக ஒரேயொரு தடவை தமக்கிடையே விளையாடியுள்ளன. 2001 நட்புப் போட்டியில் 1–0 ஆக வென்றது. 2022 போட்டியில், ஜப்பான் நடுகள வீரர் ஆவோ தனக்கா, பந்து ஆட்டமிழந்ததாகத் தோன்றிய பின்னர் சர்ச்சைக்குரிய இரண்டாவது கோலை அடித்தார். காணொளி நடுவர் பந்தின் ஒரு சிறு பகுதி உள்ளே இருந்ததை உறுதிப்படுத்தி, அந்த கோலை உறுதிப்படுத்தினார்.[49][50][51] இந்தக்குழுவில் சப்பானின் ஆச்சரியமான முதலிடம், மற்றும் செருமனியைப் போட்டியில் இருந்து வெளியேற்றுவதில் இந்த முடிவு முக்கியமானதாக இருந்தது. குழுவின் மற்ற ஆட்டத்தில் கோஸ்டா ரிக்காவிற்கு எதிராக செருமனி இரண்டு கோல் வெற்றியைப் பெற்ற போதிலும், செருமனி மூன்றாவது இடத்தையே பிடித்தது.[52]
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,851 நடுவர்: விக்டர் கோமசு (தென்னாப்பிரிக்கா) செருமனியும் கோஸ்ட்டா ரிக்காவும் தமக்கிடையே ஒரேயொரு விளையாடியுள்ளன, 2006 உலகக்கோப்பை குழுநிலைப் போட்டியில், செருமனி 4–2 ஆக வென்றது.[53] இம்முறையும் அதே கோல் கணக்கில் 4–2 ஆக செருமனி வென்றது, ஆனாலும் செருமனி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை. 2018 உலகக்கோப்பையிலும் செருமனி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இப்போட்டியில் பிரான்சைச் சேர்ந்த இசுட்டெஃபனி பிரப்பார் ஆண்களுக்கான உலகக்கோப்பைப் போட்டியில் நடுவராகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு உதவியாகச் செயற்பட்ட இரு உதவி நடுவர்களும் பெண்களே.[54]
குழு ஊ
மூலம்: FIFA
மொரோக்கோ, குரோவாசிய அணிகள் தமக்கிடையே ஒரேயொரு போட்டியில் மோதின. 1996 நட்புப் போட்டியை 2–2 என்று சமநிலையில் முடித்துக் கொண்டன. கனடா, பெல்சியம் அணிகள் ஒரேயொரு தடவை தமக்கிடையே மோதின. 1989 நட்புப் போட்டியில் பெல்சியம் 2–0 என வெற்றி பெற்றது. பெல்சியமும் மொரோக்கோவும் முன்னதாக மூன்று தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன. 1994 உலகப்போட்டி குழுநிலையில் பெல்சியம் 1–0 ஆக வென்றது. குரோவாசியாவும் கனடாவும் தமக்கிடையே போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,374 நடுவர்: அந்திரே மட்டொண்டே (உருகுவை) குரோவாசியாவும் பெல்சியமும் முன்னதாகத் தமக்கிடையே எட்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. கடைசியாக 2021 நட்புப் போட்டியில் பெல்சியம் 1–0 ஆக வென்றது. இந்தப் போட்டி 0–0 ஆக சமநிலையில் முடிந்தாலும், பெல்சியம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் தவறியது.
அகமது பின் அலி விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 43,984 நடுவர்: அந்தோனி டெய்லர் (இங்கிலாந்து) கனடாவும் மொரோக்கோவும் தமக்கிடையே மூன்று தடவைகள் விளையாடியுள்ளன, கடைசியாக 2016 நட்புப் போட்டியில் மொரோக்கோ 4–0 ஆக வென்றது. கனடாவும் புரவல நாடான கத்தாரும் இந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் எந்த ஒரு புள்ளியையும் பெறாமல் குழுநிலையில் இருந்து வெளியேறின. கனடா ஆறு தடவைகள் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி கண்டது. மொரோக்கோ 1986 இற்குப் பின்னர் முதல் தடவையாக இரண்டாவது சுற்றிற்குத் தகுதி பெற்றது. குழு எ
மூலம்: FIFA
சுவிட்சர்லாந்தும் கமரூனும் தமக்கிடையே முதல் தடவையாக விளையாடுகின்றன.
பிரேசிலும் செர்பியாவும் 2018 உலகக்கோப்பையில் குழுநிலையில் விளையாடி பிரேசில் 2–0 ஆக வென்றது. செர்பியா யூகோசுலாவிய அணியாக பிரேசிலுடன் 18 தடவைகள் விளையாடியுள்ளது. கமரூன், செர்பியா இரண்டும் முன்னதாக ஒரேயொரு தடவை நட்புப் போட்டியில் விளையாடின, செர்பியா 4–3 ஆக வென்றது.
பிரேசில், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இரண்டு குழுநிலை உலகக்கோப்பைப் போட்டிகள் உட்பட ஒன்பது தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன. 1950 உலகக்கோப்பைப் போட்டி 2–2 எனவும், 2018 போட்டி 1–1 எனவும் சமநிலையில் முடிந்தன.
செர்பியாவும் சுவிட்சர்லாந்தும் ஒரேயொரு தடவை தமக்கிடையே மோதியுள்ளன, 2018 உலகக்கோப்பை குழு நிலையில் சுவிட்சர்லாந்து 2–1 ஆக வென்றது. செர்பியா யுகோசுலாவிய அணியில் விளையாடிய போது, இரண்டும் 13 தடவைகள் சந்தித்துள்ளன, 1950 உலகக்கோப்பை காற்பந்து குழு நிலையில் 3–0 ஆக யுகோசுலாவியா வென்றது. செர்பியா எந்த வெற்றியையும் பெறாமல் குழுநிலைப் போட்டிகளில் இருந்து தொடர்ந்து மூன்றாவது தடவையாக வெளியேறியது.
கமரூன், பிரேசில் அணிகள் தமக்கிடையே இரண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் உட்பட ஆறு தடவைகள் விளையாடியுள்ளன. உலகக்கோப்பை குழுநிலைப் போட்டிகளில் 1994 இல் 3–0 ஆகவும், 2014 போட்டியில் 4–1 ஆகவும் பிரேசில் வெற்றி பெற்றது: குழு ஏ
மூலம்: FIFA
உருகுவேயும் தென் கொரியாவும் எட்டு தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன, இவற்றில் இரண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் ஆகும். 1990 உலகக்கோப்பை குழுநிலைப் போட்டியில் உருகுவே 1–0 ஆகவும், 2010 வெளியேறுநிலைப் போட்டியில் உருகுவே 2–1 ஆகவும் வென்றது.
கல்வி நகரம் விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 41,663 நடுவர்: கிளெமெண்டு துர்ப்பின் (பிரான்சு) போர்த்துகலும் கானாவும் ஒரேயொரு தடவை 2014 உலகக்கோப்பை காற்பந்து குழுநிலைப் போட்டியில் விளையாடி போர்த்துகல் 2–1 ஆக வென்றது.
தென் கொரியாவும் கானாவும் முன்னதாக எட்டு தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன, கடைசியாக 2014 இல் நட்புப் போட்டியில் 4–0 என கானா வென்றது. உலகக்கோப்பைப் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக பயிற்சியாளர் ஒருவர் தண்டனை அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். தென்கொரிய வீரர் முனை உதை அடிப்பதை அனுமதிக்காமல் நடுவர் அந்தோனி டெய்லர் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபோது தென்கொரியப் பயிற்சியாளர் பவுலோ பென்டோ அரங்கினுள் ஓடிவந்து நடுவரை நோக்கிக் கத்தினார். உலகக்கோப்பைப் போட்டிகளில் ஆட்டம் முடிவடைந்த பிறகு தண்டனை அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட மூன்றாவது நபர் இவர் ஆவார்.[55]
போர்த்துகல், உருகுவே அணிகள் முன்னதாக மூன்று முறை (ஒரு உலகக்கோப்பை உட்பட) தமக்கிடையே விளையாடியுள்ளன. 2018 உலகக்கோப்பையில் உருகுவே 2–1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
கானாவும் உருகுவையும் 2010 உலகக்கோப்பை காற்பந்து காலிறுதிப் போட்டியில் விளையாடி, சர்ச்சைக்குரிய 1-1 சமனாக நிறைவுற்று, தண்ட உதையின் போது 4-2 ஆக உருகுவை வென்றது. தென் கொரியாவும் போர்த்துகலும் ஒரேயொரு தடவை தமக்கிடையே விளையாடியுள்ளன, 2002 உலகக்கோப்பை காற்பந்து குழு நிலைப் போட்டியில் தென் கொரியா 1–0 ஆக வென்றது. 2010 போட்டிகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தென் கொரியா இரண்டாம் கட்டத்திற்கு விளையாடத் தகுதி பெற்றது.
கல்வி நகரம் விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,097 நடுவர்: பக்குண்டோ டெல்லோ (அர்கெந்தீனா) வெளியேற்ற நிலைவெளியேற்ற நிலையில் (knockout stage), ஆட்ட நேர முடிவில் ஒரு போட்டி சமநிலையில் இருந்தால், கூடுதல் நேரம் (ஒவ்வொன்றும் 15 நிமிடங்கள் வீதம்) விளையாடப்பட்டு, தேவைப்பட்டால், சமன்நீக்கி மோதல் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[43] கட்டம்
சுற்று 16நெதர்லாந்தும் ஐக்கிய அமெரிக்காவும் ஐந்து தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன, முதல் நான்கிலும் நெதர்லாந்து வென்றது. கடைசியாக 2015 இல் நடந்த போட்டியில் அமெரிக்கா 4–3 ஆக வென்றது.[56]
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,846 நடுவர்: வில்ட்டன் சம்பையோ (பிரேசில்) அர்கெந்தீனா ஆத்திரேலியாவுடன் ஏழு தடவைகள் விளையாடி, ஐந்தில் வென்று, ஒன்றை சமனாக்கி, ஒன்றில் தோல்வி கண்டது. கடைசியாக 2007 செப்டம்பரில் அர்கெந்தீனா 1–0 ஆக வென்றது.[57]
அகமது பின் அலி விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 45,032 நடுவர்: சைமன் மர்ச்சீனியாக் (போலந்து) இந்த ஆட்டத்திற்கு முன்னதாக, பிரான்சு 16 தடவைகள் போலந்துடன் விளையாடி, எட்டு ஆட்டங்களில் வென்றும், மூன்றில் தோற்றும் இருந்தது. கடைசியாக 2011 நட்புப் போட்டியில் பிரான்சு 1–0 ஆக வென்றது.[58] முதல் தடவையாக இங்கிலாந்தும் செனிகலும் தமக்கிடையே விளையாடின.[59]
சப்பான் குரோவாசியாவுடன் மூன்று தடவைகள் விளையாடியிருந்தது. ஒன்றில் மட்டும் வென்று, ஒன்றில் தோற்றிருந்தது. 1998 உலகக்கோப்பை போட்டியில் குரோவாசியா 1–0 ஆக வென்றது. 2006 உலகக்கோப்பையில் 0–0 ஆக சமனாக முடிந்தது.[60]
அல் சானுப் விளையாட்டரங்கம், அல் வாக்ரா பார்வையாளர்கள்: 42,523 நடுவர்: இசுமைல் எல்ஃபாத் (ஐக்கிய அமெரிக்கா) பிரேசில், தென் கொரியா அணிகள் ஏழு தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன, இவற்றில் ஆறில் பிரேசில் வென்றது, ஒன்றில் தென் கொரியா வென்றது. கடைசியாக 2022 இல், பிரேசில் 5–1 ஆக வென்றது.[61]
மொரோக்கோவும் எசுப்பானியாவும் மூன்று முறை தமக்கிடையே விளையாடியுள்ளன. கடைசியாக 2018 உலகக்கோப்பை குழுப் போட்டியில் 2–2 ஆக சமநிலையில் முடிந்தது.[62] முதல் 120 நிமிடங்கள் எவரும் கோல் அடிக்காததால், தண்ட உதையில் மொரோக்கோ எசுப்ப்பானியாவை 3-0 என்ற கணக்கில் வென்று முதல் தடவையாக காலிறுதிக்குள் நுழைந்தது.[63]
கல்வி நகரம் விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,667 நடுவர்: பெர்னாண்டோ ரப்பல்லினி (அர்கெந்தீனா) போர்த்துகல், சுவிட்சர்லாந்துடன் 25 தடவைகள் விளையாடி, 9 இல் வென்றது, 11 இல் தோல்வியடைந்தது. கடைசியாக சூன் 2022 இல் சுவிட்சர்லாந்து 1–0 ஆக வென்றது.[64] கொன்சாலோ ரமோசு தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் போர்த்துகல் அணியில் விளையாடி தனது முதலாவது 3-கோல்களை எடுத்தார். போர்த்துகல் 6–1 ஆக சுவிட்சர்லாந்தை வென்று 2006 இற்குப் பின்னர் முதல் தடவையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது.[65]
காலிறுதிப் போட்டிகள்குரோவாசியா பிரேசிலுடன் நான்கு தடவைகள் விளையாடியுள்ளது, மூன்றில் தோல்வியடைந்து ஒன்றை சமநிலையில் முடித்தது. இவற்றில் இரண்டு உலகக்கோப்பையில் விளையாடப்பட்டன. பிரேசில் இரண்டையும் வென்றது: 1–0 2006 குழுநிலை, 3–1 2014 குழுநிலை.[66]
நெதர்லாந்து அர்கெந்தீனாவுடன் ஒன்பது தடவைகள் விளையாடி, நான்கில் வெற்றி பெற்றது, ஒன்றில் தோல்வியடைந்தது. மூன்று சமநிலையில் முடிந்தன. இவற்றில் ஐந்து ஆட்டங்கள் உலகக்கோப்பையில் விளையாடப்பட்டன. [67] இவ்வாட்டத்தில் மொத்தம் 18 மஞ்சள் தண்ட அட்டைகள் வழங்கப்பட்டன, 2006 போர்த்துகலுக்கு எதிரான 16-ஆவது சுற்றில் மற்றொரு இடச்சு வெளியேற்ற நிலைத் தோல்வியின் போது அமைக்கப்பட்ட 16 என்ற சாதனையை இது முறியடித்தது.[68] நடுவர் அன்ந்தோனியோ மெத்தியூ லாகோசின் முடிவுகள் பெருமளவு விமர்சனத்தைப் பெற்றன, ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மஞ்சள் அட்டையை சில நிகழ்வுகளுக்கு மிகவும் மென்மையாகக் கருதின, அதே வேளை மெசியின் சாத்தியமான கைப்பந்து கவனிக்கப்படவில்லை.[69] மத்தியூ லாகோசு வழங்கிய மஞ்சள் அட்டைகளின் எண்ணிக்கையும் விமர்சிக்கப்பட்டது.[70]
மொரோக்கோ முன்னதாக போர்த்துகலுடன் இரண்டு தடவைகள் விளையாடி, ஒன்றில் வென்று, மற்றையதில் தோற்றது. 1986 உலகக்கோப்பை குழுநிலைப் போட்டியில் மொரோக்கோ 3–1 ஆக வென்றது. 2018 குழுநிலைப் போட்டியில் போர்த்துகல் 1–0 ஆக வென்றது.[71] மொரோக்கோ முதலாவது ஆப்பிரிக்க, மற்றும் அரபு நாடாக உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[72]
இங்கிலாந்து பிரான்சுடன் முன்னதாக 31 தடவைகள் விளையாடியுள்ளது. இவற்றில் 17 ஐ வென்று 9 இல் தோற்றது. இங்கிலாந்து 1966 குழுநிலைப் போட்டியில் இங்கிலாந்து 2–0 ஆகவும், 1982 குழுநிலைப் போட்டியில் 3–1 ஆகவும் வென்றது. கடைசியாக 2017 நட்புப் போட்டியில், பிரான்சு 3–2 ஆக வென்றது.[73]
அரையிறுதிப் போட்டிகள்அர்கெந்தீனா குரோவாசியாவுடன் ஐந்து தடவைகள் விளையாடியுள்ளன, இரண்டில் வென்று, இரண்டில் தோற்று, ஒன்றை சமப்படுத்தியது. 1998 குழுநிலைப் போட்டியில் அர்கெந்தீனா 1–0 ஆகவும், 2018 குழுநிலைப் போட்டியில் குரோவாசியா 3–0 ஆக வென்றது.[74]
பிரான்சு மொரோக்கோவுடன் இதற்கு முன்னதாக ஏழு தடவைகள் விளையாடி, அவற்றில் ஐந்தை வென்று, இரண்டை சமப்படுத்தியது. இது இவர்கள் சந்திக்கும் முதலாவது உலகக்கோப்பைப் போட்டி ஆகும்.[75] ஆப்பிரிக்க அணி ஒன்று விளையாடும் முதலாவது அரையிறுதிப் போட்டி இதுவாகும். அத்துடன் அரபு அணியொன்றின் முதலாவது அரையிறுதியும் இதுவாகும். மூன்றாமிடப் போட்டிகுரோவாசியாவும் மொரோக்கோவும் தமக்கிடையே இரண்டு தடவைகள் விளையாடியுள்ளன. கடைசியாக 2022 குழுநிலைப் போட்டியில் 0–0 ஆக சமநிலையில் முடித்துக் கொண்டன.[76] இவ்வெற்றியின் மூலம் குரோவாசியா இரண்டாவது தடவையாக மூன்றாம் இடத்தைப் பெற்றது. 1982 முதல் அடுத்தடுத்த 11 தடவைகள் மூன்றாம் இடத்தை ஐரோப்பிய அணி ஒன்று மூன்றாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.[77][78]
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், அல் ரய்யான் பார்வையாளர்கள்: 44,137 நடுவர்: அப்துல்ரகுமான் அல்-யசீம் (கத்தார்) இறுதிப் போட்டிஇறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும் பிரான்சும் சந்தித்தன, இரண்டும் முன்னதாக 13 தடவைகள் தமக்கிடையே விளையாடியுள்ளன, இவற்றில் அர்கெந்தீனா 6 தடவைகளும், பிரான்சு 3 தடவைகளும் வென்றுள்ளன. மூன்று போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன. உலகக்கோப்பையில் மூன்று தடவைகள் சந்தித்துள்ளன. அர்கெந்தீனா 1930 குழுநிலைப் போட்டியில் 1–0 ஆகவும், 1978 குழுநிலைப் போட்டியில் 2–1 ஆகவும் வென்றது. 2018 சுற்று-16 இல் பிரான்சு 4–3 ஆக வென்றது.[79] இரண்டு அணிகளும் இரண்டு முறை உலகக் கோப்பைகளை வென்றுள்ளன.[80] போட்டியின் ஆரம்பத்திலேயே லியோனல் மெசியும் ஆங்கல் டி மரீயாவும் கோல்கள் போட்டு அர்கெந்தீனா 2–0 என முன்னணியில் இருந்தது.[80][81] போட்டியின் 80-ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்பே தண்ட உதை மூலம் பிரான்சுக்காக ஒரு கோலைப் போட்டார். இரண்டு நிமிடங்களின் பின்னர் அவரே மீண்டும் ஒரு கோலைப் போட்டு, சமப்படுத்தினார்.[81] மேலதிக நேரத்தில் 108-ஆவது நிமிடத்தில் மெசியின் கோல் மூலம் அர்கெந்தீனா மீண்டும் முன்னிலைக்கு வந்தது, ஆனாலும், எம்பாப்பே 115-ஆவது நிமிடத்தில் தண்ட உதை மூலம் கோல்களை சமப்படுத்தினார். இதன் மூலம் இறுதிப் போட்டி ஒன்றில் மூன்று கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை எம்பாப்பே நிலைநாட்டினார்.[81] 3–3 என இறுக்கமாக முடிந்த ஆட்டத்தின் வெற்றியாளர் தண்டவுதைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது. அர்கெந்தீனா 4–2 என வென்று உலகக்கோப்பையை மூன்றாவது தடவையாகக் கைப்பற்றியது.[81] 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தென்னமெரிக்க அணி ஒன்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.
புள்ளிவிபரம்இலக்கு அடித்தவர்கள்64 ஆட்டங்களில் 172 கோல்கள் எடுக்கப்பட்டன, சராசரியாக ஓர் ஆட்டத்திற்கு 2.69 கோல்கள்.
மூலம்: பீஃபா பாதுகாப்புபோலந்து, செருமனி, பிரான்சு, குவைத், யோர்தான், இத்தாலி, பாலத்தீனம், எசுப்பானியா, பாக்கித்தான், துருக்கி, ஐக்கிய அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் உட்படக் குறைந்தது 13 நாடுகளைச் சேர்ந்த காவல் துறை, இராணுவப் படைகள் உட்பட கிட்டத்தட்ட 50,000 பாதுகாப்புப் பணியாளர்களை கத்தார் அரசாங்கம் பணியில் அமர்த்தியிருந்தது.[82] துருக்கி கிட்டத்தட்ட 3000 கலகப் பிரிவு காவலர்களை வழங்கியது.[82] பாக்கித்தான் கிட்டத்தட்ட 4,500 இராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் கத்தாரில் ஈடுபடுத்தியது.[83] குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia