இந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள், 23 பெண்கள், 13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநிதித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது.[1][2][3]
பெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.
இந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி, பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதலிலும், மல்யுத்தத்திலும் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.
இந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது.
விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:
நிகழ்வு
தேசிய முகாம்கள்
சர்வதேச அளவில்
தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி
வில்வித்தை
3.44
3.57
-
தடகளம்
6.48
4.11
1.36
இறகுப்பந்தாட்டம்
4.35
6.12
-
குத்துச்சண்டை
7.51
11.71
0.24
ஜிம்னாஸ்டிக்ஸ்
1.38
4.98
0.9
ஹாக்கி
7.69
11.21
-
ஜூடோ
2.1
2.1
-
படகுப்போட்டி
1.08
2.37
-
பாய்மரப்போட்டி
1.13
2.04
-
துப்பாக்கி சுடுதல்
11.22
11.5
1.05
நீச்சல்
1.12
0.68
-
மேசைப்பந்தாட்டம்
2.5
2.07
-
டைக்குவாண்டோ
1.46
1.22
-
வரிப்பந்தாட்டம்
-
-
3.49
பளு தூக்குதல்
3.61
3.11
-
மல்யுத்தம்
5.2
5.1
-
மொத்தம்(139.2)
60.27
71.89
7.04
சர்ச்சைகள்
தொடக்க விழா
சாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர், திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
குத்துச்சண்டை
குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை "பகல் கொள்ளை" என விவரித்தார். அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டது.
குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார். சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக "மோசடி" என கத்தினார்.
இறகுப்பந்தாட்டம்
ஜுவாலா குட்டாவும்அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது.