சாய்னா நேவால்
சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர். அரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள்.[7]. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது. சொந்த வாழ்க்கைடிசம்பர் 142018 இல் இவர் பாருபள்ளி காசியப் எனும் சக வீரரை திருமணம் செய்து கொண்டார்.[8] வெற்றிப்பாதை
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சாய்னா1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். சாதனைகள்
விருதுகள்
முதலிடம்பெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார்.[11][12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia