மே 5, 2016 நிலவரப்படியான இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு உலகத் தரவரிசைப்படி ஏழு இறகுப் பந்தாட்ட விளையாட்டாளர்கள் 2016 ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றனர். :[3]
இந்தியாவிலிருந்து மூன்று குத்துச் சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். சீனாவில் நடந்த 2016 ஆசியா மற்றும் ஓசியானியா தகுதிச் சுற்றுப் போட்டியில் முதல் தகுதிப் போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து பக்கூவில் நடந்த 2016 ஏஐபிஏ உலகத் தகுதிச் சுற்றுப் போட்டியில் 2வது, மூன்றாவது தகுதியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4][5]
இந்தியாவிலிருந்து மூன்று குழிப்பந்தாட்ட வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். சூலை 11, 2016 நிலவிய பன்னாட்டு குழிப்பந்தாட்ட தரவரிசைப்படி அனிர்பான் இலாகிரி (வரிசைஎண் 62), சிவ் சௌராசியா (வரிசைஎண் 207), அதிதி அசோக் (வரிசைஎண் 444) ஆகிய மூவரும் தங்கள் தங்கள் போட்டிகளுக்கான முதல் 60 விளையாட்டாளர்களில் வந்ததால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6][7][8]
2014, 2015 ஆண்டு உலக குறிபார்த்துச் சுடும் போட்டிகளிலும் ஆசியப் போட்டிகளிலும் சிறந்த முடிவுகளை எட்டியமையை அடுத்து இந்திய சுடுதல் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
[9]
மார்ச் 19, 2016இல் இந்திய தேசிய துப்பாக்கிச் சங்கம் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்க பதினோரு பெயர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் காற்று துப்பாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, இலண்டன் 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்ற ககன் நரங், பன்முறை உலகப் பதக்கங்கள் வென்றுள்ள ஜீத்து ராய் ஆகியோரும் அடங்குவர். தனது நான்காவது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் மானவ்ஜித் சிங் சாந்து பன்னிரெண்டாவது போட்டியாளராக சேர்க்கப்பட்டார்.[10]
தகுதி குறியீடு: Q = அடுத்த சுற்றுக்குத் தகுதி; q = வெண்கலப் பதக்கத்திற்கு தகுதி
சீருடற்பயிற்சிகள்
கலைநயம்
1964 ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதன்முறையாக 2016 ஒலிம்பிக்கில் பங்கேற்க ஒரு இந்திய விளையாட்டாளர், தீபா கர்மாகர், தேர்ந்தெடுக்கப்பட்டார். இரியோ டி செனீரோவில் நடந்த தேர்வு நிகழ்வில் வென்று ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்ற இந்தியாவின் முதல் பெண் விளையாட்டாளராக இவர் விளங்குகின்றார்.[11]
இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க நான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். கலவை இரட்டையர் போட்டிக்கு சானியா மிர்சாவும் (உலக எண். 1) ரோகன் போபண்ணாவும் (உலக எண். 10) அணி சேர்ந்தனர்; சானியாவுடன் பெண்கள் இரட்டையர் போட்டியில் பிரார்த்தனா தொம்பாரேவும் ஆண்கள் இரட்டையர் போட்டியில் ஆறுமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள லியாண்டர் பயசும் அணி சேர்ந்தனர்.[12][13]
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கீழ்காணும் தடகளப் போட்டிகளில் பங்கேற்க இந்திய விளையாட்டாளர்கள், ஒரு போட்டிக்கு உயர்ந்த எல்லையாக மூவர் என, தகுதி பெற்றனர்.[14][15]
இந்திய குண்டெறிதல் வீரர் இந்திரஜித் சிங்கும் 200 மீட்டர் விரைவோட்டக்காரர் தரம்பீர் சிங்கும் இருமுறை கொடுக்கப்பட்ட ஊக்கமருந்துச் சோதனைகளிலும் தோல்வியடைந்ததால் ஒலிம்பிக்கில் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[16]
குறியீடு
குறிப்பு–தடகளப் போட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள தரவரிசை விளையாட்டாளரின் முன்னிலை போட்டிகளுக்கு மட்டுமே
Q = அடுத்த சுற்றுக்கு தகுதி
q = தோற்றவர்களில் மிக விரைவானவர் எனத் தகுதி அல்லது, களப் போட்டிகளில், தகுதி இலக்கை அடையாது கிடைத்த இடத்தைக் கொண்டு தகுதி
1தரம்பீர் சிங் இரண்டாவது மருந்துச் சோதனையிலும் தோல்வியுற்றார்; குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் தடையும் வருங்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடையும் விதிக்கப்படும்.[16]
தகுதி குறியீடு: FA=இறுதி A (பதக்கம்); FB=இறுதி B (பதக்கமில்லை); FC=இறுதி C (பதக்கமில்லை); FD=இறுதி D (பதக்கமில்லை); FE=இறுதி E (பதக்கமில்லை); FF=இறுதி F (பதக்கமில்லை); SA/B=அரையிறுதி A/B; SC/D=அரையிறுதி C/D; SE/F=அரையிறுதி E/F; QF=காலிறுதி; R=மீள்வாய்ப்பு
2016 ஆசிய பளுதூக்கும் போட்டியில் முதல் ஏழு ஆண்களில் ஒருவராகவும் முதல் ஆறு பெண்களில் ஒருவராகவும் வந்த ஒவ்வொரு விளையாட்டாளர்கள் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.[20][21]
இந்தியாவிலிருந்து எட்டு மற்போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆடவர் கட்டற்ற வகையில் 74 கிலோ பகுப்பில் ஒருவர் 2015 உலக மற்போர் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இரு இடங்கள் 2016 ஆசிய மற்போர் தகுதிநிலைப் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது.[22]
மேலும் மூன்று மற்போர் விளையாட்டாளர்கள் தங்களிடங்களை உலகத் தகுதிப் போட்டிகளில் தனியாக வென்றனர். இதில் ஒருவர் உலான் புத்தூரில் நடந்த 2016 ஒலிம்பிக் தகுதிநிலை போட்டிகள் 1இல் ஆடவர் கட்டற்ற வகை 57 கிலோ பகுப்பிலும் மற்ற இருவர் இசுதான்புல்லில் நடந்த 2016 ஒலிம்பிக் தகுதிநிலை போட்டிகள் 2இல் பெண்கள் கட்டற்றவகை 48 & 58 கிலோ பகுப்பிலும் தங்களிடத்தைப் பிடித்தனர்.
மே 11, 2016இல் ஐக்கிய உலக மற்போர் இந்தியாவிற்கு மேலும் இரு இடங்களை வழங்கியது; இவை கிரேக்க-உரோமை 85 கிலோ மற்றும் பெண்கள் கட்டற்றவகை 53 கிலோ பகுப்பிலும் ஆகும்; ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ஏழு விளையாட்டாளர்கள் ஊக்க மருந்துப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதால் இந்த இரு இடங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன.
கட்டற்றவகை மற்போர்வீரர் நரசிங் பஞ்சம் யாதவ் ஆடவர்களுக்கான 74 கிலோ வகுப்பு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தபோதும் சூன் 25, சூலை 5 தேதிகளில் கொடுக்கப்பட்ட ஏ & பி சோதனை மாதிரிகளில் ஊக்கமருந்து இருந்ததாக கண்டறியப்பட்டது. இதனால் ஒலிம்பிக்கில் பங்கேற்க இவருக்கு மாற்றாக பர்வீன் ரானா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் இவருக்கு எதிராக சதி நடந்திருப்பதாகக் கூறி ஆகத்து 3 அன்று விலக்கலை நீக்கியது.[23] இதனை எதிர்த்து உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து ஆகத்து 18இல் நடுவர் தீர்ப்பாயம் யாதவை நான்காண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ததுடன் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்தும் நீக்கியது.[24]
குறியீடு
வெவீ - வீழல் மூலம் வெற்றி
புமு - புள்ளிகள் மூலம் வெற்றி - தோற்றவருக்கு தொழினுட்ப புள்ளிகள்
புதோ - புள்ளிகள் மூலம் வெற்றி - தோற்றவருக்கு தொழினுட்ப புள்ளிகள் இல்லை
இந்தியா நான்கு விளையாட்டாளர்களை ஒலிம்பிக் மேசைப் பந்தாட்டப் போட்டிகளுக்கு அனுப்பியது. தெற்காசிய வலயத்தில் மிக உயரிய தரவரிசையிலிருந்ததால் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற சௌம்யஜித் கோசும்மானிகா பாட்ராவும் முறையே ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆங்காங்கில் நடந்த ஆசிய தகுதிப் போட்டிகளின் மூலம் சரத் கமலும் 2004 ஒலிம்பிக்கில் பங்கேற்ற மவுமா தாசும் அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[25]
இந்தியாவிலிருந்து ஒரு யுடோ விளையாட்டாளர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார். ஆடவர் இடைநிலை எடை பகுப்பில் (90 கிலோ) அவதார் சிங் (யுடோ) ஆசிய மண்டலத்திற்கான ஒதுக்கீடில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[26][27]
நடுவர்கள்: சைமன் டெய்லர் (நியூசி) நாதன் இசுடாக்னோ (பெ.பிரித்)
பெண்கள் போட்டி
2014–15 பெண்கள் வளைதடிப் பந்தாட்ட கூட்டிணைவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தமையால் இந்துயப் பெண்கள் அணி ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது; 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.[30]
நடுவர்கள்: சீக்கோ சோமா (சப்பான்) சாரா வில்சன் (பெ.பிரித்)
வில்வித்தை
மூன்று பெண் வில்வித்தையாளர்களும் ஒரு ஆண் விளையாட்டாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; டென்மார்க்கோபனாவனில் நடந்த 2015 உலக வில்வித்தை போட்டிகளில் எட்டாவது இடத்திற்குள் வந்தமையால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[31][32][33]