ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2016 சூலை 26 முதல் செப்டம்பர் 9 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[ 1] [ 2]
வார்ன்-முரளிதரன் விருதுக்காக இடம்பெற்ற தேர்வுப் போட்டித் தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்று, ஆத்திரேலியாவுக்கு எதிரான தனது இரண்டாவது தேர்வுத் தொடர் வெற்றியையும், ஆத்திரேலியாவுக்கு எதிரான தனது முதலாவது முழுமையான தொடர் வெற்றியையும் பெற்றது.[ 3] இம்முடிவுகளை அடுத்து ஆத்திரேலியா ஐசிசி தேர்வுத் தர வரிசையில் முதலாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதே வேளையில், இலங்கை அணி ஏழாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியது.[ 4]
இலங்கைத் துடுப்பாளர் திலகரத்ன டில்சான் ஒருநாள் மற்றும் இ20ப போட்டிகளில் இருந்து இத்தொடரின் இறுதியில் ஓய்வு பெறப் போவதாக 2016 ஆகத்து மாதத்தில் அறிவித்தார்.[ 5]
இ20ப உலக சாதனை ஓட்டப்பலகை
அணிகள்
தேர்வுத் தொடர்கள்
1வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
முதலாம், இரண்டாம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாகவும், மூன்றாம், நான்காம் நாள் ஆட்டங்கள் போதிய வெளிச்சமின்மையாலும் தேநீர் இடைவேளையுடன் நிறுத்தப்பட்டன.
தனஞ்சய டி சில்வா , லக்சன் சந்தக்கான் (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
நேத்தன் லியோன் (ஆசி) தனது 200வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.
இலங்கை ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 27 தேர்வுகளில் இது இரண்டாவது வெற்றியாகும்.[ 7]
2வது தேர்வு
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
விசுவா பெர்னாண்டோ (இல), ஜொன் ஒலாந்து (ஆசி) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
இலங்கையின் 250வது தேர்வுப் போட்டி இதுவாகும்.[ 8]
மிட்செல் ஸ்டார்க் (ஆசி) தனது 100வது தேர்வு இலக்கைத் தாண்டினார்.[ 9]
ஆத்திரேலியாவின் 106 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிரான அவ்வணியின் ஆகக்குறைந்த தேர்வு ஓட்டங்களாகும்.[ 10]
ரங்கன ஹேரத் தேர்வுப் போட்டிகளில் ஹாட்-ட்ரிக் எடுத்த இலங்கையின் முதலாவது சுழற்பந்து வீச்சாளரும், இலங்கையின் இரண்டாவது பந்து வீச்சாளரும் ஆவார்.[ 10]
தில்ருவன் பெரேரா ஒரே தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றி அரைச் சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[ 11]
1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது தொடர் தேர்வு வெற்றியைப் பெற்றுள்ளது.[ 11]
3வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தனஞ்சய டி சில்வா (இல) தனது முதலாவது தேர்வு சதத்தை (129) எடுத்தார்.
ஸ்டீவ் சிமித் (ஆசி) 4,000 ஓட்டங்களை எடுத்த இளம் ஆத்திரேலியர் என்ற சாதனையை எட்டினார்.[ 12]
ரங்கன ஹேரத் (இல) ஆத்திரேலியாவுக்கு எதிரான சிறந்த பந்து வீச்சுத் தரவுகளைப் பெற்றார்.
இலங்கை ஆத்திரேலியாவுக்கு எதிரான தனது முதலாவது முழுமையான தொடர் வெற்றியைப் பெற்றது.[ 3]
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
அமிலா ஒப்போன்சோ, இலக்சன் சந்தக்கன் (இல) தமது 1வது ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டார்கள்.
மிட்செல் ஸ்டார்க் (ஆசி) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் மிக விரைவான 100 இலக்குகளைக் கைப்பற்றிய வீரர் என்றா சாதனையைப் பெற்றார்.[ 13]
2வது ஒருநாள்
எ
மெத்தியூ வேட் 76 (88) அமிலா அப்போன்சோ 4/18 (9.2 ஓவர்கள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ஜேம்சு பால்க்னர் (ஆசி) ஹாட்-ட்ரிக் எடுத்தார்.[ 14]
அஞ்செலோ மத்தியூஸ் (இல) தனது 50வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[ 15]
ஓட்ட வேறுபாட்டின் அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் இது இலங்கையின் ஆத்திரேலியாவுக்கு எதிரான பெரும் வெற்றியாகும்.[ 16]
3வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இப்போட்டியுடன் திலகரத்ன டில்சான் (இல) ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.[ 17]
தினேஸ் சந்திமல் (இல) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.
4வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
5வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இலங்கையில் ஆத்திரேலிய அணியின் முதலாவது ஒருநாள் பன்னாட்டு சதத்தை டேவிட் வார்னர் அடித்தார்.[ 18]
இ20ப தொடர்
1வது இ20ப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சச்சின் பத்திரான (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
இ20ப போட்டிகளில் ஆத்திரேலியா அதிக ஓட்டங்களைப் (263/3) பெற்று உலகசாதனை படைத்தது. முன்னைய சாதனை இலங்கை அணியின் 260/6) ஆகும்.[ 19]
கிளென் மாக்சுவெல் (ஆசி) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[ 19]
இலங்கையின் மிக மோசமான இ20ப தோல்வி இதுவாகும்.[ 19]
2வது இ20ப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
திலகரத்ன டில்சான் (இல) தனது கடைசிப் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்[ 20]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்