2014-2015 இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2014 நவம்பர் 24 முதல் 2015 பெப்ரவரி 1 வரை இடம்பெற்றது. இதன் போது இந்திய அணி ஆத்திரேலிய அணியுடன் இரண்டு முதல்-தரப் பயிற்சி ஆட்டங்களிலும் நான்கு தேர்வுப் போட்டிகளிலும் பங்காற்றியது. முதல் தேர்வுப் போட்டி டிசம்பர் 4 இல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், பிலிப் இயூசின் திடீர் இறப்பை அடுத்து முதல் தேர்வுப் போட்டி டிசம்பர் 9 இல் நடைபெற்றது.[1][2][3] மூன்றாம் தேர்வுப் போட்டி சமநிலையில் முடிந்ததால், இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து உடனடியாக இளைப்பாறுவதாக அறிவித்தார்.[4] சிட்னி நகரில் இடம்பெற்ற 4வது இறுதித் தேர்வுப் போட்டி சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, ஆத்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தேர்வுத் தொடரை வென்று போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைப் பெற்றது.
இந்திய அணி கார்ல்ட்டன் மிட் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் 2015 சனவரி 16 முதல் பெப்ரவரி 1 வரை கலந்து கொண்டு ஆத்திரேலிய, இங்கிலாந்து அணிகளுடன் மோதவிருக்கிறது.[5]
அணிகள்
தேர்வுத் தொடர் (போர்டர்-கவாஸ்கர் கிண்ணம்)
1வது தேர்வுப் போட்டி
|
எ
|
|
|
|
444 (116.4 ஓவர்கள்) விராட் கோலி 115 (184) நேத்த லியோன் 5/134 (36 ஓவர்கள்)
|
5/290d (69 ஓவர்கள்) டேவிட் வார்னர் 102 (166) கார்ன் சர்மா 2/95 (16 ஓவர்கள்)
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக 32 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது.
- கார்ன் சர்மா (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
- பிலிப் இயூசின் இறப்பை நினைவுகூர்ந்து அவர் "13வது ஆட்டக்காரர்' ஆக அறிவிக்கப்பட்டார்.
2வது தேர்வுப் போட்டி
|
எ
|
|
408 (109.4 ஓவர்கள்) முரளி விஜய் 144 (213) ஜோசு அசில்வுட் 5/68 (23.2 ஓவர்கள்)
|
|
|
224 (64.3 ஓவர்கள்) ஷிகர் தவான் 81 (145) மிட்ச்செல் ஜோன்சன் 4/41 (17.3 ஓவர்கள்)
|
|
6/130 (23.1 ஓவர்கள்) கிரிஸ் ரொஜர்சு 55 (57) இஷாந்த் ஷர்மா 3/38 (9 ஓவர்கள்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- 2ம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
- ஜோசு ஹஸில்வுட் தனது முதலாவது தேர்வுப் போட்டியை விளையாடினார்.
3வது தேர்வுப் போட்டி
|
எ
|
|
|
|
465 (128.5 ஓவர்கள்) விராட் கோலி 169 (272) ராயன் ஹரிஸ் 4/70 (26 ஓவர்கள்)
|
9/318d (98 ஓவர்கள்) சோன் மார்ஷ் 99 (215) இஷாந்த் ஷர்மா 2/49 (20 ஓவர்கள்)
|
|
6/174 (66 ஓவர்கள்) விராட் கோலி 54 (99) ராயன் ஹரிஸ் 2/30 (16 ஓவர்கள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 4ம் நாள் ஆட்டத்தில் மழையினால் 1 மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது.
- ஜோ பர்ன்சு, (ஆசி), லோகேஷ் ராகுல் (இந்) இருவருக்கும் இது அவர்களது முதலாவது தேர்வுப் போட்டியாகும். இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[6]
4வது தேர்வுப் போட்டி
|
எ
|
|
|
|
475 (162 ஓவர்கள்) விராட் கோலி 147 (230) மிட்ச்செல் ஸ்டார்க் 3/106 (32 ஓவர்கள்)
|
|
|
7/252 (89.5 ஓவர்கள்) முரளி விஜய் 80 (165) ஜோசு ஹாசில்வுட் 2/31 (17 ஓவர்கள்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலிலில் துடுப்பாடியது.
- முதற்தடவையாக ஆத்திரேலிய அணியின் முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களும் முதலாவது இன்னிங்சு ஒன்றில் அரைச்-சதம் அடித்தனர்.[7]
கார்ல்ட்டன் மிட் முத்தரப்பு ஒருநாள் தொடர்
ஆரம்பத் தொடர்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இங்கிலாந்தின் ஓட்ட வீதத்தை விட ஆத்திரேலியாவைன் ஓட்ட வீதம் 1.25 மடங்கு அதிகமாக இருந்ததால், ஆத்திரேலிய அணிக்கு மேலதிக ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்