இன்சுலின்![]() ![]() இன்சுலின் (Insulin, இலத்தீன மொழியில் இன்சுலா எனில் தீவு எனப் பொருள்படும்) ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதனை கணையத் திட்டுக்களில் உள்ள பீட்டா கலங்கள் உருவாக்குகின்றன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள்மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன. இன்சுலின் உடலின் வளர்வினை மாற்றத்திற்கான முதன்மை இயக்குநீராகும்.[1] இது கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் மற்றும் புரதங்களின் வளர்சிதைமாற்றத்திற்கு காரணமாகின்றது. முக்கியமாக, குருதியிலிருக்கும் குளுக்கோசை கல்லீரல், கொழுப்புக் கலங்கள், எலும்புத்தசை கலங்கள் உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றது.[2] இந்த திசுக்களில் உட்கொள்ளப்பட்ட குளுகோசு கிளைக்கோஜெனிசிஸ் வழியாக கிளைக்கோசனாகவோ அல்லது லிப்போஜெனிசஸ் வழியாக கொழுப்புக்களாகவோ (டிரைகிளிசரைடுகள்) மாற்றப்படுகின்றன; கல்லீரலில் இரண்டுமே நடக்கிறது.[2] குருதியில் இன்சுலின் அளவு கூடுதலாக இருந்தால் கல்லீரல் தயாரிக்கும் குளுக்கோசும் வெளிப்பாடும் தடுக்கப்படுகிறது.[3] குருதியில் சுற்றிவரும் இன்சுலினின் அளவு பல்வேறு திசுக்களிலும் புரதங்களின் உருவாக்கத்தில் தாக்கமேற்படுத்துகின்றது. எனவே இது ஓர் வளர்வினை இயக்குநீராகும் - குருதியிலுள்ள சிறு மூலக்கூறுகளை திசுக்களில் பெரிய மூலக்கூறுகளாக மாற்றுவதற்குப் பயன்படுகின்றது. குருதியில் குறைந்த இன்சுலின் அளவுகள் இருந்தால் நேரெதிராக பரவலான சிதைமாற்றம் நடந்து உடல் கொழுப்பு சேகரிப்பு சிதைகிறது. இன்சுலின் சுரப்பு நீர் குறைப்பாட்டால் நீரிழிவு நோய் உண்டாகிறது. ஒழுங்குபீட்டா செல்கள் இரத்தச் சர்க்கரை என்கின்ற குளுக்கோசு செறிவினால் தூண்டப்படுகின்றன. சர்க்கரை அளவு கூடும்போது பீட்டாசெல்கள் இன்சுலினைச் சுரக்கின்றன; சர்க்கரையளவு குறையும்போது இன்சுலின் சுரப்பது நிறுத்தப்படுகிறது.[4] அண்மித்துள்ள ஆல்பா செல்கள், பீட்டா செல்களிடமிருந்து குறிப்பு பெற்றவையாக,[4] இதற்கு எதிர்மறையாக சர்க்கரை அளவு குறைந்திருக்கும்போது குளூக்கொகானை சுரக்கின்றன; சர்க்கரை அளவு கூடும்போது நிறுத்திக் கொள்கின்றன.[2][4] கிளைக்கோஜன் பகுப்பு மூலமாகவும் குளுக்கோசிசு புத்தாக்கம் மூலமாகவும் குளுக்கோசை வெளியிட குளூக்கொகான் கல்லீரலைத் தூண்டுகிறது. எனவே இன்சுலின் கல்லீரலில் குளுக்கோசை சேகரிக்கவும் குளுக்கொகான் கல்லீரலிலிருந்து குளுக்கோசை விடுவிக்கவும் செய்கின்றன.[2][4] குருதிச் சர்க்கரைச் செறிவுற்கேற்ப இன்சுலினும் குளுக்கொகானும் சுரப்பது குளுக்கோசு சமநிலைக்கு முதன்மையான செயற்பாடாகும்.[4] மருத்துவத் தனிச்சிறப்புதன்னுடல் தாக்குதலால் பீட்டாசெல்கள் அழிபட்டால் இன்சுலின் உருவாக்க முடியாது அல்லது குருதிக்குச் சுரக்க முடியாது. இது முதல்வகை டயபடீசு எனப்படுகின்றது. இந்நோயாளிகளின் குருதியில் சர்க்கரை அளவுகள் கட்டுப்பாடின்றி மிகக் கூடுதலாக இருக்கும்; உடற்சிதைவும் காணப்படும்.[5] In இரண்டாம் வகை நீரிழிவு நோயில் முதலாம் வகை போல பீட்டா செல்கள் அழிபடுவதில்லை; மேலும் தன்னுடல் தாக்குதலும் நடைபெறுவதில்லை. மாறாக கணையத் திட்டுகளில் அமைலோயிட்டு கூடுதலாகச் சேர்ந்து பீட்டா செல்களின் உடற்கூற்றையும் உடலியக்கவியலையும் மாற்றுகின்றன.[4] இது குறித்த காரணங்கள் முழுமையாக அறியப்படாவிடினும் இரண்டாம் வகை நீரிழிவில் பீட்டா செல்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன; அல்லது இன்சுலினை குறைவாகச் சுரக்கின்றன. மேலும் திசுக்களில் இன்சுலினுக்கு எதிர்ப்பு நிகழ்கிறது.[1] மேலும் இரண்டாம் வகை நீரிழிவில் குளுக்கொகான் அதிக அளவில் சுரக்கிறது; இது குருதி சர்க்கரைச் செறிவினைப் பொருத்து கூடுவதோ குறைவதோ இல்லை. ஆனால் குருதிச் சர்க்கரை செறிவைப் பொருத்து இன்சுலின் சுரக்கிறது.[4] இதனால் குருதிச் சர்க்கரை சரியான அளவில் இருக்கும்போதும் குருதியில் உள்ள இன்சுலின் அளவு கூடுதலாக உள்ளது. இந்த நோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தபோதும் எதுவும் முழுமையானத் தீர்வை வழங்கவில்லை. குருதிச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கக் கூடிய அளவில் இன்சுலினை சுரக்கும் திறன் கணையத்திற்கு குறையும்போது இன்சுலின் ஊசிமருந்து கொடுக்கப்படுகின்றது.[6] கட்டமைப்புமனித இன்சுலின் புரதம் 51 அமினோ அமிலங்களால் ஆனது. இதன் மூலக்கூற்று நிறை 5808 அணு நிறை அலகுகளாகும். இது ஏ சங்கிலி, பி சங்கிலி கொண்ட ஓர் இருபடி புரதம் ஆகும்; இவ்விருச் சங்கிலிகளும் டைசல்பைடு பிணைப்பால் இணைந்துள்ளன. இன்சுலின் கட்டமைப்பு விலங்குகளின் இனங்களுக்கிடையே வேறுபடுகின்றது. விலங்குகளின் இன்சுலின் மனித இன்சுலினை விட, குறிப்பாக கார்போவைதரேட்டு வளர்சிதைமாற்ற விளைவுகளில், வேறுபடுகின்றது. பன்றியின் இன்சுலின் மனிதர் இன்சுலினை ஒத்துள்ளது. முதலாம் வகை நீரிழிவை குணப்படுத்த இதுவே பயன்படுத்தப்பட்டது. தற்போது மீள்சேர்வு அனடி தொழில்நுட்பம் மூலம் மனித இன்சுலின் போதுமான அளவில் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றது.[7][8][9][10] இன்சுலினின் உடற்செயலியல் செயல்கள்இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை மூன்று வழிகளில் குறைக்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்Dia
|
Portal di Ensiklopedia Dunia