இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970
இலங்கையின் 7வது நாடாளுமன்றத் தேர்தல் 1970 மே 27 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. பின்னணிமுக்கிய எதிர்க்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மார்க்சிய இடதுசாரிகளுடன் நீண்டகால கூட்டணியை ஏற்படுத்துவதே சரியானதாகும் எனத் தீர்மானித்தார்.. இதற்கமைய அவர் திரொக்சியவாதிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினார். பொதுத் திட்டம் என அழைக்கப்பட்ட இவர்களின் கூட்டுத் திட்டத்தில், பரவலான தேசியமயமாக்கல், சோவியத் சார்பு வெளியுறவுக் கொள்கை, சோல்பரி அரசியலமைப்பை ஒழித்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக இருந்தன. மாறாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு முதலாளித்துவப் போக்கைக் கடைப்பிடித்து வந்தது. அது பணக்காரர்களின் கட்சி என்ற பெயரைப் பெற்றது. இதனால் சாதாரண மக்களிடையே ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரங்கள் எளிதில் செல்வாக்கைப் பெற்றது. முடிவுகள்ஐக்கிய முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தம் 151 இடங்களில் ஐக்கிய முன்னணி 116 இடங்களைக் கைப்பற்றியது. தமிழ் பேசும் பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் பின்னர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர். சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தல்களில் 1970 தேர்தல்களே கடைசித் தேர்தல்களாகும். 1972, மே 22 ஆம் நாள் காலனித்துவ டொமினியன் ஆதிக்கத்தில் இருந்த இலங்கை அதனைக் கைவிட்டு குடியரசானது. பிரித்தானியர் வசம் இருந்த தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டன. அத்துடன் வறிய கிராம மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia