இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960
இலங்கையின் 5வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 சூலை 20 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. பின்னணிமார்ச் 1960 தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறாமையால் அதே ஆண்டில் இரண்டாம் தடவையாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின்னர் அக்கட்சி பிளவடைந்திருந்தது. ஆனாலும் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரளவிற்குத் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது. தனது கணவரின் கொள்கைகளை, குறிப்பாக சிங்களம் மட்டும் சட்டம், இலங்கையின் இந்தியத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தல் போன்றவற்றை முன்னெடுக்கப்ப்போவதாகத் தேர்தல் பரப்புரைகளில் கூறிவந்தார். டட்லி சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரை சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையே கொண்டிருந்தது. அதே வேளையில், சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறாக இடது சாரிப் போக்கைத் தமது பொருளாதாரக் கொள்கைகளில் கொண்டிருந்தது. தனியார் துறை மற்றும் சமயப் பாடசாலைகளை அரசுடமையாக்கல் இக்கட்சியின் முக்கிய கொள்கையாக இருந்தது. முடிவுகள்சுதந்திரக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. திருமதி பண்டாரநாயக்கா இலங்கைப் பிரதமரானார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia