இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்![]() இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Youth Olympic Games, YOG) பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 14 முதல் 18 அகவைக்குள்ளான[1] இளம் விளையாட்டு வீரர்களுக்காக ஒழுங்கமைக்கப்படும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போலவே நான்காண்டுகளுக்கு ஒருமுறை இடைவெளியுடனான கோடைக்கால மற்றும் குளிர்காலப் போட்டிகளாக நடத்தபடுகின்றன. இத்தகைய முதல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் 2010ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஆகத்து 14 முதல் 26 வரை நடைபெற்றது; அதேபோல இளையோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2012ஆம் ஆண்டில் ஆசுதிரியாவின் இன்சுபுரூக் நகரில் சனவரி 13 முதல் 22 வரை நடைபெற்றது.[2] இத்தகைய ஓர் கருத்துருவாக்கத்தை 1998இல் ஆசுதிரியாவின் யோகன் ரோசன்சோவ் அறிமுகப்படுத்தினார். இதனை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் இளையோர் பதிப்பாக 2007ஆம் ஆண்டு சூலை 6 அன்று குவாத்தமாலா நகரில் கூடிய 119வது அமர்வில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டிகளை நடத்தும் செலவை ப.ஒ.குவும் ஏற்று நடத்தும் நகரமும் பகிர்ந்து கொள்ளும்; விளையாட்டு வீரர்களின் பயணச் செலவுகளை ப.ஒ.கு முழுமையாக ஏற்றுக் கொள்ளும். மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia