சித்தி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 20, 1999 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2, 2001 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[ 1]
இந்த தொடரை ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் தயாரிக்க, சி. ஜெ. பாஸ்கர்[ 2] இயக்கத்தில் ராதிகா சரத்குமார் , சிவகுமார் , யுவராணி , சுபலேகா சுதாகர் , நீனா , தீபா வெங்கட் , அஞ்சு , லதா , பூவிலங்கு மோகன் , அஜய் ரத்னம் , ரியாஸ் கான் , விஜய் ஆதிராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.[ 3] தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான தொடராகவும் மற்றும் மக்களால் அதிகளவு பார்க்கப்பட்ட தொடரில் இதுவும் ஒன்றாகும்[ 4] [ 5] இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து 20 வருடங்களுக்கு பிறகு சித்தி–2 என்ற பெயரில் மீண்டும் புதிய கதைக்களத்துடன் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.[ 6]
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரங்கள்
துணை கதாபாத்திரங்கள்
ஒலிப்பதிவு
தலைப்பு பாடல்
இந்த தொடருக்கு தலைப்பு பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் வைரமுத்து என்பவர் பாடல் எழுத, பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இப் பாடலை பாடியுள்ளார். இசையைப்பாளர்தினா என்பவர் இசை அமைத்துள்ளார்.
ஒலிப்பதிவு
மறு ஆக்கம்
இந்த தொடர் மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
மொழி மாற்றம்
இந்த தொடர் சிங்களம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் ஒளிபரப்பானது.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திங்கள்-சனி தொடர்கள் நிகழ்ச்சிகள்
வணக்கம் தமிழா
கல்யாணமாலை
மாத்தியோசி