பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா (மலாய்: Taman Pinggir Gurney; ஆங்கிலம்: Gurney Seafront Park) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், பினாங்கு கர்னி டிரைவ் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கடற்கரைப் பூங்கா ஆகும். இந்த இடம் அப்போதைய ஜார்ஜ் டவுன், பினாங்கு கர்னி டிரைவ் பகுதியில் இருந்து கடற்கரைப் பூங்கா அமைப்பதற்காக மீட்கப்பட்டது.[2] பினாங்கிற்கான நீர்முனை இலக்கு எனும் தூரநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தக் கடற்கரைப் பூங்காவின் ஒரு பகுதி, 2024-இல் பொதுமக்களின் பார்வைக்குக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்தப் பூங்காவின் கட்டுமானம் நிறைவு பெறாத நிலையில் உள்ளது.[3] பொதுபினாங்கு கர்னி கடற்கரை பூங்காவை உருவாக்கும் திட்டம் 2025-ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4] 24.28-எக்டேர் (0.2428 கிமீ2) பரப்பளவில் இந்தப் பூங்கா உருவாக்கப்படுகிறது. இந்தப் பூங்காவிற்குள் ஒரு கடற்கரை முகப்பு, ஒரு கடற்கரை தோப்பு, ஒரு நீர்த் தோட்டம் மற்றும் ஒரு பொழுதுபோக்குப் பகுதி என நான்கு தனித்துவமான மண்டலங்கள் அமைக்கப்படும் என அறியப்படுகிறது.[5] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia