பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது பாயான் லெப்பாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEN, ஐசிஏஓ: WMKP), (ஆங்கிலம்: Penang International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Pulau Pinang; சீனம்: 檳城國際機場; என்பது பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 16 கி.மீ. (9.9. மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம்.[3] மலேசிய நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். 1935-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டில், 1,826,121 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி உள்ளனர். 30,433 விமான நகர்வுகளைப் பதிவு செய்துள்ளது.[1] கோலாலம்பூர், கோத்தா கினாபாலு பன்னாட்டு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக நாட்டின் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் மூன்றாவதாக உள்ளது. மேலும் பன்னாட்டுப் பயணிகள் மற்றும் சரக்கு சேவையில் கோலாலம்பூருக்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது. குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களான பயர்பிளை வானூர்திச் சேவை மற்றும் ஏர்ஆசியா விமான நிறுவனங்களின் கூடுதுறையாக (hub) உள்ளது.[4] வரலாறு![]() பாயான் லெப்பாஸ் பன்னாட்டு விமான நிலையம் என்று முன்பு பெயரிடப்பட்டது. 1935-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலம், பிரித்தானியக் காலனித்துவ பகுதியாக இருந்தபோது இந்த விமான நிலையம், கட்டி முடிக்கப்பட்டது.[5] 1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய இராணுவம் பினாங்கைத் தாக்கியபோது, ஜப்பானிய வான்வழித் தாக்குதல்களால் முதலில் தாக்கப்பட்ட இடங்களில் இந்த விமான நிலையமும் ஒன்றாகும்.[6] ஜப்பானியர் தாக்குதல்பட்டர்வொர்த் அரச ஆஸ்திரேலிய விமாளத்தளம்; மற்றும் பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையம் உட்பட பினாங்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் ஜப்பானியர்கள் குறிவைத்து தாக்கினார்கள். பினாங்கில் இருந்த பிரித்தானிய, ஆஸ்திரேலிய விமானப்படைப் பிரிவுகளைச் செயல் இழக்கச் செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது. 1970-களில், விமான நிலையத்தில் பெரிய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மிகப்பெரிய பயணிகள் ஜெட் விமானமான போயிங் 747 ரக விமானங்கள் தரை இறங்குவதற்காக ஓடுபாதை நீளமாக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டு விரிவாக்கப் பணிகள் நிறைவு அடைந்தன. பினாங்கு பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பொதுவடக்கில் இருந்து வரும் பயணிகள் ஜோர்ஜ் டவுன், பட்டர்வொர்த் மற்றும் பினாங்கு பாலம் மற்றும் பினாங்கு இரண்டாவது பாலம் ஆகிய இரண்டு பாலங்களையும் பார்க்க முடியும். நாட்டின் மற்ற பெரிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது காத்திருப்பு நேரங்கள் குறைவு. விமான நிலையத்தில் நெரிசல் இல்லை. மற்றும் பயனாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia