ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி; முன்பு காலத்தில் இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். 1980-ஆம் ஆண்டுகளில் நகரமயமாக்கல், இந்தப் பகுதியைப் பெருநகரப் புறநகர்ப் பகுதியாக மாற்றி அமைத்தது.
ஒரு காலத்தில் இங்கு டயரா கோசதுலாட்டா (Dyera Costulata) எனும் ஒரு வகையான ஜெலுத்தோங் மரங்கள் அதிகமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த மரnக்களின் நினைவாக ஜெலுத்தோங் என்று இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. மலேசியாவின் பிரபல வழக்கறிஞரான கர்பால் சிங் (Karpal Singh), ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியில்தான் முதன்முதலில் தேசிய அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.
31 சூலை 1978 தொடங்கி 29 நவம்பர் 1999 வரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்தார். இவர் 'ஜெலுத்தோங் புலி' (Tiger of Jelutong) எனும் புனைப் பெயரைப் பெற்றார்.[7]