பாயான் பாரு மக்களவைத் தொகுதி
பாயான் பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bayan Baru; ஆங்கிலம்: Bayan Baru Federal Constituency; சீனம்: 峇央峇鲁国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P052) ஆகும்.[6] பாயான் பாரு மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து பாயான் பாரு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் பெரும் நகரமாக பாயான் லெப்பாஸ் நகரம் உள்ளது. இந்த மாவட்டம் பினாங்குத் தீவின் தென்மேற்குப் பகுதியில் பாதியை உள்ளடக்கியது; மற்றும் கிழக்குப் பகுதியில் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையாக உள்ளது. பாயான் பாரு புறநகர்ப் பகுதிகள்
பாயான் பாரு மக்களவைத் தொகுதி
பாயான் பாரு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பாயான் பாரு மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia