தஞ்சோங் மக்களவைத் தொகுதி
தஞ்சோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong; ஆங்கிலம்: Tanjong Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang Island District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P049); மற்றும் மலேசியாவில் மிகச் சிறிய மக்களவைத் தொகுதியும் ஆகும்.[3] தஞ்சோங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் மக்களவைத் தொகுதி 37 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4] பொதுஜார்ஜ் டவுன், பினாங்குதஞ்சோங் மக்களவைத் தொகுதி பினாங்கு மாநிலத் தலைநகரமான ஜார்ஜ் டவுன் மாநகரத்தின் மையத்தில் உள்ளது. இந்த மாநகரத்திற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் (King George III) நினைவாக ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிரித்தானிய குடியேற்ற நகரம் ஜார்ஜ் டவுன் ஆகும்.[5] இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்து உள்ளது. இந்த மாநகரில் ஏறக்குறைய 708,127 பேர் வசிக்கிறார்கள். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் ஜார்ஜ் டவுன் மாநகரம் இரண்டாவது இடம் வகிக்கிறது.[6] பினாங்கு பெருநகரம்ஜார்ஜ் டவுன் மாநகரக் கூட்டம் (Greater Penang) என அழைக்கப்படும் பெருநகர் பகுதி அமைப்பில்; ஜார்ஜ் டவுன், பினாங்கு ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகள், பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் செர்டாங் நகரங்கள் உள்ளன. இங்கு சுமார் 2,412,616 பேர் வசிக்கிறார்கள். இந்த பெருநகரப் பகுதி மலேசியாவி்ன் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும். இதன் உள் நகரம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (World Heritage Site). மலேசியாவின் முதல் மாநகரம்இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் (Japanese Occupation of Malaya) ஜார்ஜ் டவுன் கீழ்ப் படுத்தப்பட்டது. போரின் முடிவில் பிரித்தானியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1957-இல் மலாயா பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இரண்டாம் எலிசபெத் மகாராணியாரால் (Queen Elizabeth II) ஜார்ஜ் டவுன் நகரம் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜார்ஜ் டவுன் நகரம், மலேசிய நாட்டின் நவீன வரலாற்றில் முதல் மாநகரமாகப் பெயர் பெற்றது. ஜார்ஜ் டவுன் வரலாறு
தஞ்சோங் வாக்குச் சாவடிகள்2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் மக்களவைத் தொகுதி 37 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
தஞ்சோங் மக்களவைத் தொகுதி
தஞ்சோங் தேர்தல் முடிவுகள்
தஞ்சோங் வேட்பாளர் விவரங்கள்
தஞ்சோங் சட்டமன்ற தொகுதிகள்
தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia