மத்திய மாகாணம் மற்றும் பேரர்
மத்திய மாகாணம் மற்றும் பேரர் (Central Provinces and Berar), மத்திய இந்தியாவின் தக்காண பீடபூமியில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரமாக நாக்பூர் நகரம் இருந்தது. இம்மாகாணம், பிரித்தானிய இந்தியாவில் இருந்த மத்திய மாகாணம் மற்றும் பேரர் மாகாணங்களை இணைத்ததன் மூலம் 1903-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபுவால் புதிதாக நிறுவப்பட்டது.[1]1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 1,68,13,584 ஆக இருந்தது. நாக்பூர் மாகாணம் மற்றும் சௌகோர் மற்றும் நெர்புத்தா பகுதிகளைக் கொண்டு 1861-ஆம் ஆண்டில் மத்திய மாகாணம் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் ஐதராபாத் நிஜாமிடமிருந்து 5 நவம்பர் 1902 அன்று குத்தகைக்கு எடுக்கப்பட்ட பேரர் பகுதிகள் மற்றும் மத்திய மாகாணத்தை இணைத்து 1903-ஆம் ஆண்டில் மத்திய மாகாணம் மற்றும் பேரர் புதிதாக நிறுவப்பட்டது.[2] 1947-ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1950-ஆம் ஆண்டில் இம்மாகாணத்தின் பகுதிகள் மற்றும் மத்திய இந்திய முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை, மும்பை மாகாணம், மத்திய பாரதம் மற்றும் விந்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் போது மத்திய பாரதம் மற்றும் விந்தியப் பிரதேசம் ஆகியவைகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia