மன்மத லீலை
மன்மத லீலை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஆலம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் மன்மத லீலா என்றும் இந்தியில் மீத்தி மீத்தி பாட்டின் என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கதைதிருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் மதன். இதையறிந்த அவரது மனைவி ரேகாவுக்கும் மதனுக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இதனால் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள் ரேகா. ஒரு கட்டத்தில் பெரிய மனிதரான ரேகாவின் தந்தைக்கும் வீட்டு சமையல்காரிக்கும் இடையில் உள்ள தகாத உறவை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இது அவளது தாய்க்குத் தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைகிறாள். இறுதியில் கணவனை வந்தடைகிறாள். மதன் திருந்தி மனைவியுடன் நல்ல கணவனாக வாழ்கிறான். நடிகர்கள்
தயாரிப்புஇத்திரைப்படம் மூலம் நடிகர் ராதாரவி தமிழ்த் திரைப்படத் துறையில் அறிமுகமானார். இப்படத்தில் முதல்முறையாக ஒய். ஜி. மகேந்திரன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.[2] பாடல்கள்எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கண்ணதாசன் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia