அண்ணாமலை நகர்
அண்ணாமலை நகர் (ஆங்கிலம்:Annamalai Nagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிக்கு அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளது. அமைவிடம்மாவட்டத் தலைமையிடமான கடலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்த அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 3 கி.மீ. தொலவில் உள்ள சிதம்பரம் ஆகும். இதன் கிழக்கில் பிச்சாவரம் 15 கி.மீ.; மேற்கில் சிதம்பரம் 4 கி.மீ.; வடக்கில் பரங்கிப்பேட்டை 15 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு4.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,445 வீடுகளும், 16,289 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 95.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 884 பெண்கள் வீதம் உள்ளனர்.[2] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia