ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் (ஆங்கிலம்: Srimushnam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். ஸ்ரீமுஷ்ணம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பெயர்இந்த ஊர் சோழர் காலக் கல்வெட்டுகளிலும் அதற்கு பின்னரும் திருமுட்டம் என்றே நீண்ட காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில் நடந்த சமசுகிருதமயமாக்கத்தின் போதே திருமுட்டம் என்பது ஸ்ரீமுஷ்ணம் என்று மாற்றப்பட்டதாக தெரிகிறது. அமைவிடம்
பேரூராட்சியின் அமைப்பு15.75 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 57 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] கல்லூரிகள்
பள்ளிகள்
மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,277 வீடுகளும், 13,971 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 990 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,639 மற்றும் 78 ஆகவுள்ளனர்.[6] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°25′E / 11.4°N 79.42°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39 மீட்டர் (127 அடி) உயரத்தில் இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia