பெண்ணாடம்
![]() பெண்ணாடம் (ஆங்கிலம்:Pennadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் அருகில் தென் திசை நோக்கி 9 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் மாவட்டம் எல்லையான ஆலத்தியூர் கிராமத்தில் இந்தியாவில் மாபெரும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் ஒன்றான ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது.[4] அதன் தொடர்ச்சியான ரயில்வே வழித்தடத்தில் ஈச்சங்காடு ரயில் நிலையம் தொடர்ந்து பெண்ணாடம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. அமைவிடம்விருத்தாசலம் – அரியலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெண்ணாடம் பேரூராட்சிக்கு வடகிழக்கே விருத்தாச்சலம் 18 கி.மீ.; மேற்கில் திட்டக்குடி 13 கி.மீ.; தொழுதூர் 26 கி.மீ.; தென்மேற்கே பெரம்பலூர் 51 கி.மீ.; வடக்கே உளுந்தூர்பேட்டை 41 கி.மீ.; தெற்கே அரியலூர் 40 கி.மீ.; திருச்சி 100 கி.மீ.; மற்றும் தஞ்சாவூர் 85 கி.மீ.; தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் மாவட்டத் தலைமை நகரமான கடலூர் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு12.65 ச.கி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,708 வீடுகளும், 19,494 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1005 பெண்கள் வீதம் உள்ளனர்.[6] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54 மீட்டர் (177 அடி) உயரத்தில் இருக்கின்றது கோயில்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia