கங்கைகொண்டான் (கடலூர்)
கங்கைகொண்டான் (ஆங்கிலம்:Gangaikondan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்கடலூர் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு கிழக்கில் கடலூர் 45 கி.மீ.; மேற்கில் விருத்தாச்சலம் 18 கி.மீ.; வடக்கில் சிதம்பரம் 40 கி.மீ. மற்றும் தெற்கில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு19.50 ச.கி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,620 வீடுகளும், 6,434 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 609 மற்றும் 39 ஆகவுள்ளனர்.[5] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia