ஆக்டினியம்
ஆக்டினியம் (Actinium) என்பது Ac என்னும் குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அக்டினியம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. ஆக்டினியத்தின் அணுவெண் 89 மற்றும் அணு எடை 89 ஆகும். இதன் அணு நிறை 227 ஆகும். ஆக்டினியத்தின் அணுவில் கருவைச் சுற்றியமைந்துள்ள 7 இலத்திரன் ஓடுகளில் முறையே 2, 8, 18, 32, 18, 9, 2 இலத்திரன்கள் சுற்றி வருகின்றன. இயற்பியல் இயல்புகள்இது வெள்ளி நிறம் கொண்ட, கதிரியக்கம் உள்ள, உலோகத் தன்மையான தனிமம் ஆகும். பொதுவான சூழல் வெப்பநிலையில் திண்ம நிலையில் இருக்கும், இந்தத் தனிமத்தின் உருகுநிலை 1323 கெல்வினும், கொதிநிலை 3471 கெல்வினும் ஆகும். காணப்படும் இடங்கள்அக்டினியம், யுரேனியத் தாதுகளுடன் 227Ac என்னும் வடிவில், மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படுகின்றது. α மற்றும் β கதிர்களை வெளிவிடும் இதன் அரைவாழ்வுக் காலம் 21.773 ஆண்டுகளாகும். பயன்கள்இது ரேடியத்திலும் 150 மடங்கு கதிரியக்கம் கொண்டது. இதனால் இது ஒரு சிறந்த நியூத்திரன் மூலமாகக் கருதப்படுகின்றது. இது தவிர இதற்கு வேறுவிதமான குறிப்பிடத்தக்க தொழில் பயன்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். ஓரிடத்தான்கள்இதற்கு 3 ஓரிடத்தான்கள் உண்டு. இவை 225Ac, 226Ac, 227Ac என்னும் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் 227Ac மட்டுமே, 21,773 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக்]] கொண்டு உறுதியானதாக உள்ளது. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia