நிகோனியம் (Nihonium, நிஹோனியம், குறியீடு: Nh) என்பது அணு எண் 113 ஐக் கொண்டுள்ள ஒரு தனிமம் ஆகும். இது கதிரியக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ள ஒரு செயற்கைத் தனிமம் (இயற்கையில் கிடைக்காதது, ஆய்வுகூடத்தில் மட்டும் உருவாக்கக்கூடியது) ஆகும். நிகோனியம்-286 என்பது நிகோனியத்தின் நிலைத்தன்மை கொண்ட ஓரிடத்தான் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 20 செக்கன்கள். நிகோனியம் எகா-தாலியம் அல்லது தனிமம்-113 எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தனிமம் முதல் தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவில் தூப்னா நகரில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான ஒருங்கிணைந்த கல்விக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2015 திசம்பரில், பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (ஐயூபிஏசி) இத்தனிமத்தை அங்கீகரித்தது.[6] 2016 நவம்பரில், ஐயூபிஏசி இதற்கு நிஹோனியம் என அதிகாரபூர்வமாகப் பெயரிட்டது..[7] இது யப்பானிய மொழியில் யப்பான் நாட்டைக் குறிக்கும் பெயராகும். 2016 நவம்பர் 28 இல் இப்பெயர் அதிகாரபூர்வமானது.[8][9]
↑ 1.01.1Hoffman, Darleane C.; Lee, Diana M.; Pershina, Valeria (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: இசுபிரிங்கர் பதிப்பகம். ISBN1-4020-3555-1.