ஆத்தூர் (சேலம்)
இது வசிஷ்ட நதியின்(வற்றாத ஆறு எனப்பொருள்) தென் புறம் அமைந்துள்ளது. பேரூராட்சியாக இருந்த இந்நகரம் 1965 சனவரி நான்காம் தேதி நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. இந்நகரின் வழியாக தேசியநெடுஞ்சாலை 68 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 30 ஆத்தூரையும் முசிறியையும் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை 157 ஆத்தூரையும் பெரம்பலூரையும் இணைக்கிறது மக்கள் வகைப்பாடு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 16,371 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,793 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6147 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,797 மற்றும் 384 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.7%, இசுலாமியர்கள் 7.24%, கிறித்தவர்கள் 1.88%, சமணர்கள 0.04% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[1] வரலாறுதமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு 1886 ஆம் ஆண்டிலேயே பஞ்சாயத்து தோற்றுவிக்கப்பட்டது,இங்கு கல்வராயன் மலை தொடரில் உருவாகும் முட்டல் ஏரி,அருகே அருநூற்று மலை,கருமந்துறை ,முத்துமலை முருகன் கோவில் போன்றவை சிறிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது, இது மிக பழமையான நகரமாக இருந்த போதிலும், அரசும் கால்நடை பூங்கா போன்ற சில வளர்ச்சி திட்ட பணிகள் முன்னெடுத்து பொருளாதார துறையில் அரசின் சிந்தனைக்கு செல்லும் வகையில் இன்னும் பெரிய வளர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. தற்போது கிழங்கு மாவு ,ஜவ்வரிசி,மக்காச் சோளம்,பருத்தி, விதை உற்பத்தி நிறுவனங்கள், மஞ்சள் உற்பத்தி, மற்றும் நல்ல கல்வி நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பெயர்களும், காரணங்களும்இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளன.10ஆம் நூற்றாண்டு காலத்தில் சோழர்களுக்கு வானவன் மாதேவி யை பெண் கொடுத்த திருக்கோவிலூர் தலைமையிடமாக கொண்ட தமிழ் குறுநில மன்னனான மலையமான்களின் மிலாடு நாட்டிற்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்ததால் இது மலையமான் ஆத்தூர் எனவும் அழைக்கப்பட்டது .சேலம் மாவட்டக் கையேட்டைத் (Salem District Manual) தயாரித்த "லெபான்" என்ற ஆங்கிலேயர் ஆறு+ஊர் ஆற்றூராகி பின் வழக்கில் ஆத்தூர் என அழைக்கப்பட்டது என்கிறார்.ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளதால் ஆற்று+ஓரம்+ஊர் என்பதிலிருந்து திரிந்து பின்னர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என அவர் கருதுகிறார். பிற்காலத்தில் ஆக்கிரமித்த விஜய நகரத்தார் தெலுங்கு அரசர்கள் முக்கிய அலுவல் இடமாக தனியே நரசிங்கபுரத்தை உருவாக்கி இவ்வூருக்கும் "அனந்தகிரி" என்று பெயர்மாற்றம் செய்தும் அழைத்தனர். அனந்தகிரி என்றால் மலைகளுக்கிடையே அமைந்துள்ள ஊர் (கிரி என்றால் மலை) எனப் பொருள் உண்டு.அனந்தகிரி ஆத்தூர்(தெலுங்கு பெயர்)என இரு பெயர்களால் இது அழைக்கப்பட்டதாக ஆங்கிலேயர் தனது குறிப்பில் கூறுகிறார். தண்டகாருண்யம்திரேதாயுகத்தில் தண்டகாருண்யம் என வழங்கப்பட்ட இவ்விடத்தில், வசிஷ்டரும் அவரது சீடர்களும் தவம் செய்தார்கள். அம்முனிவர் வெங்கடேச பெருமாளை நினைத்து தவம் செய்தார். அத்தவத்தைப் பாராட்டி வெங்கடேஸ்வரர் காட்சியளித்தார். ஆகையால் இங்கிருக்கின்ற கோயிலுக்கு "பிரசன்ன வெங்கடேஸ்வரர்" எனப் பெயரும் நதிக்கு வசிஷ்ட நதி எனவும் பெயர் வந்தது. கல்வெட்டுகள்
முடியாட்சிஇந்த ஊரை, கெட்டி முதலி மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, இங்கிருக்கின்ற கோட்டையைக் கட்டினார்கள். கி.பி.1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792ல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. ஆங்கிலேயர் ஒரு ராணுவத் தொகுப்பை இங்கு 1799ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது. பள்ளி௧ள்
அலுவலங்கள்
வங்கிகள்
வழிபாட்டுத்தலங்கள்
மேற்கோள்கள்ஊடகக் காட்சியகம்
வெளிஇணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia