காடையாம்பட்டி
காடையாம்பட்டி (ஆங்கிலம்:Kadayampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்சேலம் - தர்மபுரி செல்லும் சாலையில், தீவட்டிப்பட்டி ஊராட்சி -டேனிஷ்பேட்டை ஊராட்சிக்கு செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் காடையம்பட்டி உள்ளது. காடையம்பட்டி பேரூராட்சிக்கு தெற்கில் சேலம் 31 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள டேனிஷ்பேட்டையில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு13.61 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 38 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,857 குடும்பங்களும், 11,390 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 69.74% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 924 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia