அரசிராமணி
அரசிராமணி (ஆங்கிலம்:Arasiramani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 32 கி.மீ. தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் எடப்பாடி 7 கி.மீ.; மேற்கில் அந்தியூர் 30 கி.மீ.; வடக்கில் மேட்டூர் 32 கி.மீ.; தெற்கில் குமாரபாளையம் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு28.16 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 63.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia