ஆர்செனிக் அமிலம்
ஆர்செனிக் அமிலம் (Arsenic acid) என்பது H3AsO4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இம்மூலக்கூறு வாய்பாடு AsO(OH)3, என்று மேலும் விரிவாகவும் எழுதப்படுகிறது. நிறமற்ற இவ்வமிலத்தின் பண்புகள் பாசுபாரிக் அமிலத்தின் பண்புகளை ஒத்திருக்கிறது. ஆர்செனேட்டு மற்றும் பாசுபேட்டு உப்புகள் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆர்செனிக் அமிலத்தை தனிமைப்படுத்த முடியாது ஆனால் கரைசலாகக் கிடைக்கிறது. அமில நிலையில் இது அதிக அளவில் அயனியாகிறது. இதனுடைய அரைநீரேறி வடிவம் (H3AsO4·½H2O) நிலையான படிகமாகக் காணப்படுகிறது. 100°செ வெப்பநிலையில் படிக வடிவ மாதிரிகளின் நீர் நீக்கப்படுகிறது.[1] பண்புகள்ஆர்செனிக் அமில மூலக்கூறு, தனித்துவம் மிக்க நாற்பட்டகச் சமச்சீர்மை C3v தோற்றம் கொண்டுள்ளது. As–O பிணைப்பு நீளம் 1.66 முதல் 1.71 Å[2] வரையிலான அளவுகளில் காணப்படுகிறது ஒரு முப்புரோட்டிக் அமிலமாக இருப்பதால் இதனுடைய அமிலத்தன்மையும் முச்சமநிலையில் உள்ளதாக விவரிக்கப்படுகிறது.
இதனுடைய அமிலத்தன்மை எண் Ka மதிப்பு பாசுபாரிக் அமிலத்தின் மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது. மூன்றாவது அயனியாக்கும் ஆற்றலில் தோன்றும் ஆர்செனேட்டு அயனி அதிகக் காரத்தன்மையுடன் காணப்படுகிறது. மேலும் இவ்வமிலம் பாசுபாரிக் அமிலத்தைப் போலல்லாமல் சிறந்த ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது. அயோடைடை அயோடினாக மாற்றும் வினை இதற்குச் சான்றாகக் கருதப்படுகிறது. தயாரிப்புஆர்செனிக் மூவாக்சைடை அடர் நைட்ரிக் அமிலம் மற்றும் இருநைட்ரசன் மூவாக்சைடுடன் சேர்த்து வினைப்படுத்தினால் உடன் விளைபொருளாக ஆர்செனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.[3].
இறுதியாக இவ்வினையில் தோன்றும் கரைசலை குளிர்வித்தால் ஆர்செனிக் அமிலத்தின் நிறமற்ற அரைநீரேறி படிகங்கள் H3AsO4·½H2O உருவாகின்றன. ஆனாலும் குறைந்த வெப்பநிலைகளில் படிகமாகும் போது இவ்வமிலத்தின் இருநீரேறி H3AsO4·2H2O உற்பத்தியாகிறது[3]. பிற தயாரிப்பு முறைகள்ஆர்செனிக் ஐந்தாக்சைடு நீரில் கரையும்பொழுது ஆர்செனிக் அமிலம் மெதுவாக உருவாகிறது. மெட்டா நிலை அல்லது பைரோ ஆர்செனிக் அமிலத்தை நீரில் கரைக்கும்பொழுதும் ஆர்செனிக் அமிலம் உண்டாகிறது. இம்முறைகளைத் தவிர நேரடியாக ஈரமான ஆர்செனிக்கை ஓசோனுடன் வினைப்படுத்தியும் ஆர்செனிக் அமிலம் தயாரிக்கலாம்.
பயன்கள்ஆர்செனிக் அமிலத்தின் நச்சுத் தன்மை காரணமாக இதனுடைய வர்த்தகவகை பயன்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகிறது, சில வேளைகளில் ஆர்செனிக் அமிலம் மரப்பாதுகாப்புப் பொருள், அகல நிரல் உயிர்கொல்லி, உலோக மற்றும் கண்ணாடி தயாரிப்பு வினைகளில் இறுதி முடிப்பு முகவர் , சிலவகை சாயப்பொருட்கள் தொகுப்பு வினைகளில் வினையூக்கி என பலவாறு பயன்படுத்தப்படுகிறது. முயல்கள் மீதான ஆர்செனிக் அமிலத்தின் LD50 நச்சுத்தன்மை மதிப்பு 6 மி.கி/கி.கி அல்லது 0.006கி/கி.கி ஆகும்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia