முப்பாசுபாரிக் அமிலம்
முப்பாசுபாரிக் அமிலம் (Triphosphoric acid) என்பது H5P3O10, என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒர் அமிலமாகும். இது பல்பாசுபாரிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. பாசுபாரிக் அமிலத்தின் குறுக்க வடிவம் முப்பாசுபாரிக் அமிலமாகும். பாசுபாரிக் அமிலக் ) குடும்பத்தில், பைரோபாசுபாரிக் அமிலத்திற்கு ( H4P2O7 ) அடுத்ததாக காணப்படும் மற்றொரு பல்பாசுபாரிக் அமிலம் முப்பாசுபாரிக் அமிலமாகும். பைரோபாசுபாரிக் அமிலம் இருபாசுபாரிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அடினோசின் முப்பாசுபேட்டு (அ.மு.பா.) போன்ற சேர்மங்கள் யாவும் முப்பாசுபாரிக் அமிலத்தினுடைய எசுத்தர்கள் ஆகும். முப்பாசுபாரிக் அமிலம் படிகவடிவில் தயாரிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக H5P3O10 என்ற சமநிலை கலவையில் 18 சதவீதம்முப்பாசுபாரிக் அமிலம் காணப்படுகிறது. சுழி பாகை செல்சியசு வெப்பநிலையில், சோடியம் முப்பாசுபேட்டு சேர்மத்தை அயனிப் பரிமாற்ற வினையினால் தூய முப்பாசுபாரிக் அமிலக் கரைசலைத் தயாரிக்கலாம்[1]. முப்பாசுபாரிக் அமிலத்தின் பல்வேறு வகையான அமிலத்தன்மை எண்கள் (pKa ) அறியப்படுகின்றன. 1.0 ; 2.2 ; 2.3 ; 5.7 ; 8.5,[1] 1.0 ; 2.2 ; 2.3 ; 3.7 ; 8.5 [2][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia