புரோமசமிலம்
புரோமசமிலம் (Bromous acid) என்பது HBrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமிலமாகும். இவ்வமிலத்தில் புரோமின் +3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. புரோமசமிலத்தின் உப்புகள் புரோமைட்டுகள் எனப்படுகின்றன. இந்த அமிலம் நிலையற்றது மற்றும் ஒரு வினையில் இடைநிலையாக உருவாகிறது. உதாரணமாக, ஐப்போபுரோமைட்டுகளின் ஆக்சிசனேற்ற வினையின்[1] போது இது இடைநிலையாகத் தோன்றுகிறது. வேதியியல்மரபார்ந்த வேதியியல் முறை அல்லது மின்வேதியியல் முறையில் நேர்மின் முனை ஆக்சிசனேற்றம் வழியாக புரோமசமிலத்தைத் தயாரிக்க முடியும்.
ஐப்போ புரோமசமிலத்தை விகிதச் சிதைவுக்கு உட்படுத்தினால் அது புரோமசமிலம் மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ஆகியனவாகப் பிரிகிறது.
புரோமிக் அமிலமும் ஐதரோ புரோமிக் அமிலமும் விகிதச்சேர்க்கை வினையில் ஈடுபட்டு புரோமசமிலத்தைக் கொடுக்கின்றன.
சேர்மங்கள்பல புரோமைட்டு சேர்மங்கள் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன. இவற்றைத் தனித்துப் பிரிக்கவும் இயலும். உதாரணமாக , NaBrO2• 3H2O மற்றும் Ba(BrO2)2•H2O.[1] பயன்கள்பெர்மாங்கனேட்டுகளை மாங்கனேட்டுகளாக ஒடுக்கும் வினைகளில் புரோமைட்டுகள் பயன்படுகின்றன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia