டைதயோனிக் அமிலம்
டைதயோனிக் அமிலம் (Dithionic acid) என்பது H2S2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கரைசலாக மட்டுமே அறியப்படுகிறது [2]. உப்புகள்டைதயோனிக் அமிலம் இரட்டைப் புரோட்டான் வழங்கியாகும். இதனால் உருவாகும் உப்புகள் டைதயோனேட்டுகள் எனப்படுகின்றன. ஒரு புரோட்டான் இழந்து உருவாகும் அமில உப்புகள் ஏதும் அறியப்படவில்லை. டைதயோனேட்டு உப்புகள் அனைத்தும் நீரில் நன்கு கரைகின்றன [2]. இவ்வகை உப்புகள் மிதமான ஆக்சிசனேற்றிகளாகவும் மிதமான ஒடுக்கிகளாகவும் செயல்படுகின்றன. டைதயோனேட்டு அயனி ஈத்தேன் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இரண்டு SO3 குழுக்கள் கிட்டத்தட்ட மற்றைக்கப்பட்ட இணக்கத்தையே ஏற்றுள்ளன. S—S பிணைப்புகள் 2.15 Å நீளம் கொண்டுள்ளன. S—O பிணைப்புகள் 1.43 Å.நீளத்துடன் குறைவான நீளம் கொண்டுள்ளன. தயாரிப்புஒரு சல்பைட்டை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாக டைதயோனேட்டு தயாரிக்கப்படுகிறது. (அதாவது +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலிருந்து அவை +5 ஆக்சிசனேற்ற நிலைக்கு மாறுகின்றன) ஆனால் கந்தக டை ஆக்சைடின் குளிர்ந்த நீர்த்த கரைசலை மாங்கனீசு டை ஆக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து பேரளவில் டைதயோனேட்டு தயாரிக்கப்படுகிறது.
உருவாகும் மாங்கனீசு டைதயோனேட்டு கரைசல் பின்னர் இரட்டை இடப்பெயர்ச்சி வினை மூலம் டைதயோனேட்டு உப்புகளாக மாற்றப்படுகின்றன.
பேரியம் டைதயோனேட்டு கரைசலுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் அடர்த்தியான டைதயோனிக் அமிலக் கரைசல் கிடைக்கிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia