ஐதரசன் அசுட்டட்டைடு
ஐதரசன் அசுட்டட்டைடு (Hydrogen astatide) என்பது HAt, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அசுட்டட்டைன் ஐதரைடு, அசுட்டட்டேன் அல்லது அசுட்டிடோஐதரசன் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் அசுட்டட்டைன் அணு ஐதரசன் அணுவுடன் சகப்பிணைப்பாகப் பிணைந்துள்ளது.[1] ஐதரசன் அசுட்டட்டைடு தண்ணீரில் கரைந்து ஐதரோ அசுட்டடிக் அமிலமாக உருவாகிறது. இவ்வமிலத்தின் பண்புகள் மற்ற நான்கு இருபடி அமிலங்களின் பண்புகளுடன் ஒத்திருக்கின்றன. குறிப்பாக அவை நான்கைக் காட்டிலும் சிறிது வலிமையாகவும் இது உள்ளது. எளிதாக அசுட்டட்டைன் மற்றும் ஐதரசன் தனிமங்களாக சிதைதல்[2], அசுட்டட்டைனின் பல்வேறு ஓரிடத்தான்கள் குறைந்த அரைவாழ்வுக் காலம் கொண்டிருத்தல் போன்ற காரணங்களால் அதிகமாக இவ்வமிலம் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், இச்சேர்மத்திலுள்ள அணுக்களின் எலக்ட்ரான் கவர்திறன் கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது. அசுட்டட்டைன் அயனியும் எளிதாகக் கவரப்படுவதால் பிரிகையடைதல்[3] எளிதாகி ஐதரசன் அணு எதிர்மின் சுமையை ஏற்கிறது. எனவே ஐதரசன் அசுட்டட்டைடு மாதிரியால் கீழ்கண்ட வினையில் ஈடுபடமுடிகிறது.
இதன் விளைவாக தனிம ஐதரசன் வாயுவும் அசுட்டட்டைன் வீழ்படிவாதலும் நிகழ்கிறது. மேலும், ஐதரசன் ஆலைடுகள் அல்லது HX சேர்மங்களின் உருவாதல் வெப்ப அளவுகள் ஆலைடுகளின் தொகுதிகள் அதிகரிக்கும் போது குறைகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. அதேநேரம், ஐதரயோடிக் அமிலக் கரைசல் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஐதரோனியம் – அசுட்டட்டைன் கரைசலானது தண்ணீர்- ஐதரசன் – அசுட்டட்டைன் கரைசலைவிட தெளிவாகக் குறைவான நிலைப்புத் தன்மையே கொண்டுள்ளது. இறுதியாக அசுட்டட்டைன் அணுக்கருவின் கதிர்வீச்சுப்பகுப்பு H-At பிணைப்புகளைத் துண்டிக்கிறது. அசுட்டட்டைனுக்கு நிலையான ஒரிடத்தன்கள் எதுவும் கிடையாது. அசுட்டட்டைன் 210 மட்டுமே ஓரளவு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஓரிடத்தனாக உள்ளது. இதனுடைய அரைவாழ்வுக் காலம் தோரயமாக 8.1 மணி நேரமாக இருக்கிறது. இதனால் இதனுடைய வேதிச் சேர்மங்களைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுகிறது[4]. ஏனெனில் அசுட்டட்டைன் விரைவாக சிதைவடைந்து மற்ற ஓரிடத்தன்களாக மாறிவிடுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia