ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)
மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 5,796 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 20,948 ஆகும். அருகமைந்த நகரங்கள்ஆலங்குளத்திற்கு மிக அருகேஅருகமைந்த திருநெல்வேலி இரயில் நிலையம் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இரயில் சேவை உள்ளது . கிழக்கில் 80 கீ மீ தொலைவில் துத்துக்குடி விமான நிலையம் கப்பல் போக்குவரத்து உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் முறையே: கிழக்கில் திருநெல்வேலி 30கி.மீ.; மேற்கில் தென்காசி 24 கி.மீ.; வடக்கில் சங்கரன்கோவில் 48 கி.மீ.; தெற்கில் அம்பாசமுத்திரம் 20 கீ மீ. போக்குவரத்துஆலங்குளம் நகரானது திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஆலங்குளம் வழியாகச் செல்கின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தூத்துக்குடி, சேரன்மகாதேவி, நாகர்கோவில், திருச்செந்தூர், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, பாபநாசம், முக்கூடல், அம்பாசமுத்திரம், கடையம் பகுதிகளுக்கும் நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில புனலூர், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. பேரூராட்சியின் அமைப்பு12.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 130 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 8°52′N 77°30′E / 8.87°N 77.5°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (416 அடி) உயரத்தில் இருக்கின்றது. தொழில்ஆலங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் மற்றும் பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia