வடக்கு சுலாவெசி
வடக்கு சுலாவெசி (ஆங்கிலம்: North Sulawesi; இந்தோனேசியம்: Sulawesi Utara) என்பது இந்தோனேசியா, சுலாவெசி தீவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். இதன் தலைநகரம் மனாடோ. இந்த நகரம், வடக்கு சுலாவெசி மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இந்த மாநிலம், பிலிப்பீன்சு தெற்கிலும்; மலேசியா, சபா மாநிலத்தின் தென்கிழக்கிலும்; சுலாவெசி தீவின் மினகாசா தீபகற்பத்தில் அமைந்துள்ளது. ஆனாலும் இந்த மாநிலம், மினகாசா தீபகற்பத்திற்கும் தெற்கு பிலிப்பீன்சுக்கும் இடையில் அமைந்துள்ள பல்வேறு சிறிய தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது. பிலிப்பீன்சு மாநிலமான டாவோ ஆக்சிடெண்டல் மற்றும் சொக்ஸ்சர்ஜென் பகுதிகளையும், கிழக்கே மலுக்கு கடலையும், மேற்கே கோருந்தாலோ. சுலாவெசி கடலையும், தென்மேற்கே டோமினி வளைகுடாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. புவியியல்வடக்கு சுலாவெசி மாநிலம் சுலாவெசி தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. புவி நிலை, புவி உத்திசார் நிலை, மற்றும் புவிசார் அரசியல் நன்மைகளைக் கொண்டுள்ள இந்தோனேசியாவின் மூன்று மாநிலங்களில் இந்த மாநிலமும் ஒன்றாகும். இது பசிபிக் விளிம்பில் அமைந்துள்ளது. வடக்கு சுலாவெசியின் பெரும்பகுதி மலைப்பாங்கானது. மேலும் பல செயல்நிலை எரிமலைகளைக் கொண்டுள்ளது. சோபுடான் மலை; மற்றும் மினாகாசா தீபகற்பத்தில் 6,634 அடி (2,022 மீட்டர்) உயரத்தில் உள்ள கிளாபாட் மலைகளைக் குறிப்பிடலாம். கடலோர தாழ்நிலங்கள் குறுகியவையாக உளளன. இருப்பினும் அங்குள்ள மண் வளமானது. வேளாண்மைக்கு சிறந்த மண்வளத்தைக் கொண்டுள்ளது.[6] மேலும் கடற்கரையில் பவளப்பாறைகள் உள்ளன. மிலாங்கோ ஆறு மற்றும் மார்சா ஆறு உட்பட பல வேகமாகப் பாயும் ஆறுகளால் மேட்டு நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கின்றது.[6] அமைவு
மக்கள்தொகைவடக்கு சுலாவெசியின் மக்கள்தொகையில் மினாகாசன் சமூகத்தினர் மிகப்பெரிய பிரிவாக உள்ளனர். சாங்கிரியர் மற்றும் கோருந்தாலோ சமூகத்தினர் கணிசமான அலவிற்கு சிறுபான்மையினராக உள்ளனர். மகசாரியர், சீனர்கள், அரேபியர்கள், ஜாவானியர், பத்தாக் மற்றும் பல்வேறு மொலுக்கன் மக்கள் உட்பட பல சிறிய குழுக்களும் இந்த மாநிலத்தில் வசிக்கின்றனர். வடக்கு சுலாவெசியில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள்; இருப்பினும் இசுலாமும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. சமயம்வடக்கு சுலாவெசியின் சமயம்(2022)[7] சீர்திருத்தத் திருச்சபை (62.91%) இசுலாம் (31.84%) கத்தோலிக்க திருச்சபை (4.45%) இந்து சமயம் (0.59%) பௌத்தம் (0.14%) கன்பூசியம் (0.02%) நாட்டுப்புற மதம் (0.05%)
வடக்கு சுலாவெசியின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அதே நேரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இசுலாத்தைப் பின்பற்றுகிறார்கள்; சிறிய எண்ணிக்கையிலானவர்கள் இந்து சமயம் அல்லது பிற நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். வடக்கு சுலாவெசியின் தீவுகள் மற்றும் மினாகாசாவின் மாவட்டம்; மற்றும் வடக்கு சுலாவெசியின் நகரங்களில் கிறிஸ்தவம் பிரதான மதமாக உள்ளது. அதே வேளையில் போலாங் மோங்கோண்டோ மாவட்டம்; மற்றும் நகரங்களில் இசுலாம் மிகப்பெரிய மதமாகும். காலநிலைகாலநிலையைப் பொறுத்தவரை, கோருந்தாலோ மாநிலத்தைப் போலவே வடக்கு சுலாவெசி மாநிலத்திற்கும் காலநிலை உள்ளது. வடக்கு சுலாவெசி மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பதால், அதிகமான வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை செப்டம்பரில் 22°C ஆகும். அதிகபட்ச வெப்பநிலை அக்டோபரில் 33°C வெப்பநிலையுடன் காணப்படுகிறது. 2013-ஆம் ஆண்டில் சராசரி வெப்பநிலை 26°C முதல் 27°C வரை இருந்தது. வடக்கு சுலாவெசி மாநிலத்தில் ஒப்பீட்டளவில் அதிக ஈரப்பதம் உள்ளது. 2013-இல் சராசரி ஈரப்பதம் 86.5% விழுக்காட்டை எட்டியது. மே மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு உள்ளது. அதாவது 307.9 மிமீ; ஆனால் அதிக மழை நாட்கள் சூலை மற்றும் திசம்பர் மாதங்களில் ஆகும்; அதாவது 24 நாட்கள். காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
சான்றுகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia